3டி  பொம்மையை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: காரணம் தெரியுமா?

 

3டி  பொம்மையை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: காரணம் தெரியுமா?

பெண்கள் மீது கொண்ட வெறுப்பால், 3டி பொம்மையை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  

டோக்கியோ: பெண்கள் மீது கொண்ட வெறுப்பால், 3டி பொம்மையை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  

டோக்கியோவைச் சேர்ந்த 35 வயதான  அகிஷிகோ கொண்டோ என்ற இளைஞர் வேலைபார்த்த இடத்தில் பெண்களால் பல பிரச்னைகளை எதிர்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பெண்கள் மீது வெறுப்பு கொண்ட அவர், பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டால், பிரச்னைகளே வாழ்க்கையாகும் என்று எண்ணி ஹட்சுனே மிகு என்ற கற்பனை கதாபாத்திரத்தின் 3டி  பொம்மையை திருமணம் செய்துகொண்டார். 

robo

பெற்றோர் எதிர்ப்பை மீறி, பொம்மைக்கு மணப்பெண் அலங்காரம் செய்து அதன் விரலில் மோதிரம் அணிவித்து அகிஷிகோ திருமணம் செய்துகொண்டார். ஜப்பான் டோக்கியோவில் உள்ள டவுன் ஹாலில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் 40க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் மட்டுமே கலந்துகொண்டதாகவும், மிகுந்த பொருட்செலவில் இந்தத் திருமணம் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

robo

திருமணம் குறித்து பேசியுள்ள  அகிஷிகோ கொண்டோ, ‘நான் திருமணம் செய்துகொண்டுள்ள ஹட்சுனே மிகுவிற்கு வயதாகாது. என் மனம் நோகும்படி நடந்து கொள்ளாது. இதையெல்லாம் நான் பெண்ணிடம் எதிர்பார்க்க முடியாது. அது நடக்காதக் காரியமும் கூட. நாம் அனைத்து விதமான காதலையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.