3டி புகைப்படங்களைப் பதிவேற்றும் புதிய வசதி ஃபேஸ்புக்கில் அறிமுகம்

 

3டி புகைப்படங்களைப் பதிவேற்றும் புதிய வசதி ஃபேஸ்புக்கில் அறிமுகம்

3டி புகைப்படங்களை உருவாக்கும் வசதியை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

கலிபோர்னியா: 3டி புகைப்படங்களை உருவாக்கும் வசதியை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

சமூக வலைத் தளங்களில் முன்னணியாக உள்ள ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு புதிய வசதிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்திக் கொண்டு வருகிறது. அந்த வகையில், நியூஸ் ஃபீட் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டியில் 3டி புகைப்படங்களை உருவாக்கும் வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக்கின் நியூஸ் ஃபீட் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டியில் அனைவரும் 3டி படங்களை பார்க்க முடியும். எனினும் 3டி புகைப்படங்களை உருவாக்கும் வசதி இன்று முதல் வழங்கப்படுவதாகவும், இந்த பயன்பாடானது இனி  வரும் வாரங்களில் அனைவருக்கும் கிடைக்கும் எனவும் ஃபேஸ்புக் 360 தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இந்த புதிய அம்சத்தின் மூலம், புகைப்படத்தை போர்டிரெயிட் மோடில் எடுத்து, அதனை 3டி போட்டோவாக ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ள முடியும். ஃபேஸ்புக்கில் உள்ள மெனுவைக் குறிக்கும் மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்து 3டி போட்டோவை உருவாக்கும் வாய்ப்பை தேர்வு செய்ய வேண்டும். 3டி படங்களுக்கான தொழில்நுட்பம் பொருள், இடத்தின் முன்பகுதி மற்றும் பின்னணி இடைவெளியை உள்ளிட்டவற்றை தனி தனி அடுக்குகளாகப் பிரித்து அவற்றின் கோணங்களை மாற்றி முப்பரிமாண முறையில் இயக்கலாம்.

பின்னர் படத்தை ஸ்கிரால், பேன் அல்லது டில்ட் செய்து படத்தை உண்மையான 3டி-யில் பார்க்க முடியும். விர்ச்சுவல் ரியாலிட்டியில், ஆகுலஸ் கோ பிரவுசர் அல்லது ஆகுலஸ் ரிஃப்ட்-ல் ஃபயர்பாக்ஸ் உள்ளிட்டவற்றில் 3டி புகைப்படங்களை பார்க்கலாம்.