3ஜி நெட்வொர்க் சேவை நிறுத்தம்- ஏர்டெல் தகவல்

 

3ஜி நெட்வொர்க் சேவை நிறுத்தம்- ஏர்டெல் தகவல்

2020 மார்ச் மாதத்துக்குள் 3ஜி நெட்வொர்க் சேவையை நிறுத்த போவதாக ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது.

இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஜியோவின் வருகையால் பல தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் காணாமல் போய் விட்டன. தற்போது இருக்கும் பார்தி ஏர்டெல், வோடோபோன் ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல். போன்ற நிறுவனங்களும் ஜியோவை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. 

கோபால் விட்டல்

இந்நிலையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் வரும் மார்ச் மாதத்துக்குள் நாடு முழுவதும் தனது 3ஜி நெட்வொர்க்கை நிறுத்த  போவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கோபால் விட்டல் இது குறித்து கூறுகையில், 4ஜி சேவையை தனித்துவமாக வழங்கும் நோக்கில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நாடு முழுவதும் 3ஜி சேவை நிறுத்த போகிறோம் என்று கூறினார்.

மொபைல் இணைப்புகள்

ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே கடந்த மாதம் கொல்கத்தா தனது 3ஜி நெட்வொர்க்கை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் 4ஜி சேவையை வழங்குவதில் தீவிரமாக செயல்பட்டு வரும் அதேவேளையில் 5ஜி நெட்வொர்க்கை இந்தியாவில் செயல்படுத்துவது தொடர்பாக சில நிறுவனங்கள் முயற்சி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.