2ஜி தீர்ப்பின் கடைசி வரிகள் என்ன… படித்துக்காட்டிய ஆ.ராசா

 

2ஜி தீர்ப்பின் கடைசி வரிகள் என்ன… படித்துக்காட்டிய ஆ.ராசா

தமிழ்நாட்டின் பட்ஜெட் அளவுக்கு 2ஜியில் திமுக கொள்ளையடித்துள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சுமத்தியது கண்டும், 2ஜி வழக்கில் ஆ.ராசாவும், கனிமொழியும் திகார் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார்கள் என்றும் அதிமுக அமைச்சர்களும் சொல்லி வந்த நிலையில், திமுக பொதுச்செயலாளர் ஆ.ராசா ஆவேசப்பட்டு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ‘’2ஜி வழக்கு போலியானது. அது நிரூப்பிக்கப்படவில்லை. அதனால்தான், நீதிபதி ஓபி சைனி சொன்ன, 2ஜி வழக்கின் தீர்ப்பின் கடைசி வரிகள்,

2ஜி தீர்ப்பின் கடைசி வரிகள் என்ன… படித்துக்காட்டிய ஆ.ராசா

’மிக நேர்த்தியாக ஜோடிக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் சொல்லப்பட்டுள்ள எந்த குற்றச்சாட்டுகளையும் சிபிஐ நிரூபிக்கப்படவில்லை என்ற முடிவுக்கு வருவதில் எனக்கு சிறிதும் தயக்கம் இல்லை’ என்று இருக்கின்றன.

மேலும், ‘’கடந்த 7 ஆண்டுகளாக கோடை விடுமுறை காலம் உட்பட எல்லா அலுவலக நாட்களிலும் திறந்த நீதிமன்ற அறையில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஈடுபாட்டுடன் அமர்ந்து தங்களுடன் உள்ள சட்டப்படியான சான்றுகளுடன் எவரேனும் வருவார்களா என்று எதிர்பார்த்து காத்திருந்தேன். ஆனால், என் காத்திருப்பு வீணாகத்தான் போனது. எந்த ஜீவனும் வரவில்லை. வதந்தி, கிசுகிசு, ஊகம் ஆகியவற்றை உருவாக்கிய, பொது கருத்தையே எல்லோரும் நம்பிக்கொண்டிருந்தனர் என்பதையே இது காட்டுகிறது என்றாலும், பொதுமக்களின் புரிதலுக்கு நீதி வழக்கு விசாரணையில் இடமில்லை’’என்கிறார் ஓபி சைனி.

அதாவது, வதந்தி, கிசுகிசு, ஊகம் ..இதுதான் 2ஜி என்று ஓபி சைனி சொன்னார் என்றார் ராசா.