காற்று வாங்க போனார்; 2 கோடி வாங்கி வந்தார்

 

காற்று வாங்க போனார்; 2 கோடி வாங்கி வந்தார்

அது வேண்டும் என்று அதை நோக்கியே ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு கூட சில நேரங்களில் அது கிடைப்பதில்லை. அதனால்தான் தனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று அவர்களும் அலுத்துக்கொள்கிறார்கள். ஆனால், `எதைப்பற்றியுமே யோசிக்காமல் சும்மா போகிற போக்கில் சிலருக்கு கிடைத்துவிடுகிறது.

காற்று வாங்க போனார்; 2 கோடி வாங்கி வந்தார்

தாய்லாந்து பெண்மணிக்கும் அப்படித்தான். சும்மா காத்து வாங்க பீச்சுக்கு போனருக்கு 2 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது.

தாய்லாந்து நாகான் ஸ்ரீ தம்மரட் மாகாணத்தின் கடற்கரையில் காத்து வாங்கலாம் என்று போயிருக்கிறார் நியாம்ரின். கனமழை பெய்து ஓய்ந்த நேரம் அது. கடற்கரை மணலில் வித்தியாசமாக ஒரு கல் கிடப்பதை கண்டதும், அதை உறவினர் உதவியுடன் வீட்டுக்கு எடுத்துச்சென்றார்.

பின்னர்தான் அது அம்பெர்கிரிஸை போல இருக்கின்றன என்ற சந்தேகம் வந்தது. பின்னர் இணையங்களில் இதுகுறித்து தேடியபோது, அது திமிங்கலத்தின் அரிய வகையான சுரப்பு திரவம் ஆகும். இது வாசணை திரவியம் தயாரிக்க பயன்படுகிறது என்று தெரியந்தது.

6 கிலோ எடையுள்ள இந்த கட்டியின் சந்தை மதிப்பு 2 கோடி (இந்திய மதிப்பு) என்றும் தெரியவந்ததால் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறார் 48 வயதாகும் நியாம்ரின்.