கொத்தாக அள்ளிய ஈபிஎஸ்! ஓபிஎஸ்க்கு வெறும் 2 ஓட்டுக்கள்!

 

கொத்தாக அள்ளிய ஈபிஎஸ்!  ஓபிஎஸ்க்கு வெறும் 2 ஓட்டுக்கள்!

முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்த போதும் தன்னைத்தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கடைசிவரை பிடிவாதமாக இருந்தார் ஓ பன்னீர்செல்வம். ஆனாலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அதிகமாக இருந்தால்தான் அவரே தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும் கடைசி நேரத்தில் அதையும் சொல்லி பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தினார்கள்.

கொத்தாக அள்ளிய ஈபிஎஸ்!  ஓபிஎஸ்க்கு வெறும் 2 ஓட்டுக்கள்!

அப்படித்தான் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்த போதும் தன்னைத்தான் எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்க வேண்டும் என்று எவ்வளவோ போராடிப் பார்த்தார் பன்னீர்செல்வம். ஆனால் வெற்றி பெற்ற அனைத்து எம்எல்ஏக்களும் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். மனோஜ் பாண்டியன், கடம்பூர் ராஜு எம்எல்ஏக்கள் மட்டுமே ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனால் தேர்தல் தோல்விக்கு எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம் என்று அவர் மீது குற்றம் சுமத்தி அவரை ஒதுக்கிவிட்டு தன்னை எதிர்க்கட்சித் தலைவராக அறிவிப்பார்கள் என்று நினைத்த பன்னீர்செல்வத்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

கொத்தாக அள்ளிய ஈபிஎஸ்!  ஓபிஎஸ்க்கு வெறும் 2 ஓட்டுக்கள்!

கொங்கு மண்டலத்தில் இருந்து தான் அதிக எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். அதனால் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் தான் எதிர்க்கட்சித் தலைவராக வரவேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்ததால், ஆத்திரப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், கொங்கு மண்டலத்தில் இருந்து தானே ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள். அப்படி என்றால் நான் முன்னாள் சபாநாயகர் தனபால் அவர்களை எதிர்க்கட்சித் தலைவராக முன்மொழிகிறேன் என்று சொன்னதும், கொஞ்ச நேரம் அதிமுக கூட்டத்தில் அமைதி நிலவியது.

கொத்தாக அள்ளிய ஈபிஎஸ்!  ஓபிஎஸ்க்கு வெறும் 2 ஓட்டுக்கள்!

உடனே கூட்டத்தில் இருந்த ஒவ்வொரு எம்எல்ஏக்களும், அண்ணன் எடப்பாடி யார் தான் தேர்தலில் மொத்த செலவையும் கவனித்துக்கொண்டார், அண்ணன் எடப்பாடியார்தான் 234 தொகுதிகளிலும் சுற்றி பிரச்சாரம் செய்தார், அண்ணன் எடப்பாடியார் தான் ஆரம்பம் முதல் கடைசி வரைக்கும் நாக்கு வறண்டு போகுமளவுக்கு மேடையில் பிரச்சாரங்கள் எல்லாம் பேசி பேசி வாக்குகள் சேகரித்தார், அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி தன் முதல்வர் வேட்பாளராக இருந்தார், அண்ணன் எடப்பாடியார்தான் கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற வைத்து இருக்கிறார். அதனால் ஜனநாயக முறைப்படி அவர் எதிர்க்கட்சித் தலைவராக வர வேண்டும் என்பதுதானே நியாயம்? என்று பேச,

இத்தனை பேச்சுக்கு மத்தியிலும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இரண்டு பேர் மட்டுமே பேசி இருக்கிறார்கள். இதனால்தான் காலை 10 மணிக்கு ஆரம்பித்த கூட்டம் மதியம் வரைக்கும் ஒரு முடிவை எட்டாமல் சென்று கொண்டிருந்திருக்கிறது. கடந்த 7ஆம் தேதி நடந்த கூட்டத்தை போலவே இன்றைக்கும் எந்த முடிவும் எட்டப்படாமல் கூட்டம் ஒத்தி வைக்கப்படும் என்றும் கூட எம்.எல்.ஏக்கள் நினைத்திருக்கிறார்கள்.

கொத்தாக அள்ளிய ஈபிஎஸ்!  ஓபிஎஸ்க்கு வெறும் 2 ஓட்டுக்கள்!

விவகாரத்தை எப்படியாவது ஒரு வழிக்கு கொண்டு வர வேண்டுமென்று நினைத்த எடப்பாடி, கருத்து வேறுபாடு தீர்க்க முடியாத பட்சத்தில் தேர்தல் கொண்டு வருவது தான் ஜனநாயகம். அதனால் ஜனநாயக முறைப்படி நாம் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை தேர்ந்தெடுக்க தேர்தல் வைப்போம். அதில் யாருக்கு வாக்கு அதிகமாக இருக்கிறதோ அவரே எதிர்க்கட்சித் தலைவர் என்ற முடிவை சொல்ல, இதில் அப்செட் ஆன ஓபிஎஸ், தனக்கு இருப்பது மனோஜ் பாண்டியன் கடம்பூர் ராஜு என்ற இரண்டு ஓட்டுகள் தான். அதனால் தேர்தல் வைத்தால் தனக்கு எத்தனை வாக்குகள் வரும் என்பதை கணக்கிட்ட ஓபிஎஸ், திடீரென்று எழுந்து, நீங்களே இருந்துட்டு போங்க… என்னமோ பண்ணிட்டு… போங்க என்று சொல்லி விட்டு கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்திருக்கிறார். இதன் பின்னரே எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவர் என்று அனைத்து எம்.எல்.ஏக்களாலும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதன்பின்னரே அனைத்து எம்.எல்.ஏக்களுடன் சென்று ஓபிஎஸ்சை சமாதனம் செய்து, அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டார் எடப்பாடியார்.