அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களையும் தாண்டி நின்ற 2 பேரை முதலில் அழைத்த முதல்வர்

 

அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களையும் தாண்டி நின்ற 2 பேரை  முதலில் அழைத்த முதல்வர்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த அக்டோபர் 12ல் காலமானார். அதனால் முதல்வருக்கு இந்த வருடம் தீபாவளி கொண்டாட்டம் கிடையாது. ஆனாலும் அவர், முதல்வர் என்ற அடிப்படையில் தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

தீபாவளிக்கு முதல்நாள், முதல்வரின் தாயார் மறைந்த முப்பதாவது நாள். அன்றைய தினம் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் பலரும் முதல்வரின் வீட்டில் குவிந்திருந்தனர்

அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களையும் தாண்டி நின்ற 2 பேரை  முதலில் அழைத்த முதல்வர்

அந்த கூட்டத்தின் கடைசியில் புதுக்கோட்டை நகரமன்ற முன்னாள் தலைவர் ராஜசேகரனும், புதுக்கோட்டை மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத்தலைவர் நெவளிநாதனும் நின்றிருந்தனர்.

கதவை திறந்து வந்த முதல்வருக்கு அனைவரும் வணக்கம் வைத்தனர். எல்லோருக்கும் வணக்கம் வைத்த முதல்வரின் கண்ணில் சட்டென பட்டது அந்த சிலை. அது அவரின் அம்மா சிலை.

அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என்று வரிசையாக நின்றிருக்க. அவர்களை எல்லாம் தாண்டி, அந்த வெண்கல சிலையை வைத்து நின்றிருந்த ராஜசேகரனையும், நெவளிநாதனையும் அழைத்தார் முதல்வர்.

அந்த சிலையை பெற்றுக்கொண்ட முதல்வர், ‘’அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை’’ என்று அந்த சிலையில் எழுதி இருந்ததை படித்தார். உடனே தன் குடும்பத்தினரை அழைத்து, ‘’இதை பத்திரமா பூஜை அறையில் வைங்க’’என்று சொல்லிவிட்டு,

’’நல்ல நாளில்(30வது நாள்) இதை கொடுத்திருக்கீங்க.. ரொம்ப சந்தோசம்’’என்று சொல்லி ராஜசேகரனையும், நெவளிநாதனையும் தட்டிக்கொடுத்திருக்கிறார் முதல்வர்.