Home சினிமா #2point0trailerlaunch| ரஜினி தான் எனக்கு பிடித்த ஹீரோ, அவரை பார்த்து வியந்தேன்: யார் சொன்னது தெரியுமா?

#2point0trailerlaunch| ரஜினி தான் எனக்கு பிடித்த ஹீரோ, அவரை பார்த்து வியந்தேன்: யார் சொன்னது தெரியுமா?

ரஜினிகாந்த் ,அக்‌ஷய்குமார். எமி ஜாக்‌ஷன் நடிப்பில் உருவாகியிருக்கும் 2.0 படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

சென்னை: ரஜினிகாந்த் ,அக்‌ஷய்குமார். எமி ஜாக்‌ஷன் நடிப்பில் உருவாகியிருக்கும் 2.0 படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான  திரைப்படம் எந்திரன். இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 எனும் பெயரில் தற்போது உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் எமி ஜாக்‌ஷன், அக்‌ஷய் குமார் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் டீசரை வெளியிட்டிருந்த படக்குழுவினர் தற்போது டிரைலரை  வெளியிட்டுள்ளனர். 

இதற்கான விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் ஷங்கர், ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்‌ஷன், ரசூல் பூக்குட்டி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். சென்னை ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்று வருகிறது.

இவ்விழாவில் பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம்  அனிருத், நீங்கள் இசையமைத்த படங்களில் நடித்த ஹீரோக்களில் உங்களுக்குப் பிடித்த நடிகர் யார் என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், ‘ரஜினிகாந்த் தான். அவருடைய ஆன்மீகம் , கடின உழைப்பின் மூலம் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார். அதனால் எனக்குப் பிடித்த ஹீரோ ரஜினிகாந்த் தான். ஆஸ்கர் வாங்கியதற்குப் பின்பு நான் 40 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் ரஜினிகாந்தின் உழைப்பைப் பார்த்து வியந்தேன். அதுதான் எனக்கும் உந்துதலாக இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

அரசுப்பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

ஈரோடு ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்திற்கு உள்ளானதில் 35 பேர் படுகாயமடைந்தனர்.

சாலையை சீரமைக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

திருப்பத்தூர் ஜோலார்பேட்டையில் குண்டும் குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்கக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.

திமுக பிரமுகர் கொலை வழக்கில் கைதான 4 பேர், குண்டர் சட்டத்தில் அடைப்பு

திண்டுக்கல் திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் வெட்டிகொல்லப்பட்ட வழக்கில் கைதான 4 பேர், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த அக்டோபர் 22ஆம் தேதி திண்டுக்கல்...
Do NOT follow this link or you will be banned from the site!