#2Point0 ரசூல் பூக்குட்டிக்கு அமெரிக்காவில் கோல்டன் ரீல் விருது

 

#2Point0 ரசூல் பூக்குட்டிக்கு அமெரிக்காவில் கோல்டன் ரீல் விருது

சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து வசூலை குவித்த படம் 2.O படத்திற்கு சவுண்ட் டிசைன் செய்த ரசூல் பூக்குட்டிக்கு கோல்டன் ரீல் விருது வழங்கப்படுள்ளது

சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து வசூலை குவித்த படம் 2.O படத்திற்கு சவுண்ட் டிசைன் செய்த ரசூல் பூக்குட்டிக்கு கோல்டன் ரீல் விருது வழங்கப்படவுள்ளது.

ஷங்கர் இயகத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து வசூலை குவித்த படம் 2.O. குழந்தைகளை மட்டுமில்லாமல்  அனைத்து தரப்பினரையும் கவர்ந்து  பல நாட்கள் ஓடிய இந்தப்படத்தில் செல்போன் பேசுவதால் இயற்கைக்கு எந்தவிதமான ஆபத்துக்கள் வருகிறது என்பதை அழகாக பதிவு செய்திருப்பார் ஷங்கர். 

இந்தப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளும் சவுண்ட் டிசைன்களும் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்தப் படத்திற்கு ஏதாவது ஒரு அவார்டு கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று அப்போதே பேசப்பட்டது.

இந்நிலையில் படத்திற்கு சவுண்ட் டிசைன் செய்த ரசூல் பூக்குட்டி தனது ட்விட்டரில் ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார். அமெரிக்காவில் வழங்கப்படும் கோல்டன் ரீல் அவார்டுக்கு 2.O படம் சவுண்ட் டிசைனிற்காக பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக அவர் அதில் கூறியிருக்கிறார். அதிகபட்டசமான பரிந்துரைக்கப்பட்டது 2.O படம் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய சினிமா சார்பில் கோல்டன் ரீல் வாங்க தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது 2.O படம் மட்டும் தான் என்பதையும் அவர் மகிழ்வுடன் பதிவு செய்துள்ளார்.