மார்ச் 1 முதல் இலவச கொரோனா தடுப்பூசி… யாருக்கு போடப்படும்? – அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்

மார்ச் 1 முதல் இலவச கொரோனா தடுப்பூசி… யாருக்கு போடப்படும்? – அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்

தமிழகத்தில் ஜனவரி 16ஆம் தேதியிலிருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கும் சுகாதாரத் துறையினருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதல் டோஸ் முடிந்து தற்போது அனைவரும் இரண்டாவது டோஸ் எடுத்துவருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளக் கூடாது என பிரதமர் மோடி வலியுறுத்தினாலும் மக்களின் பயத்தைப் போக்க அமைச்சர் விஜய பாஸ்கர் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

மார்ச் 1 முதல் இலவச கொரோனா தடுப்பூசி… யாருக்கு போடப்படும்? – அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்

இச்சூழலில் தடுப்பூசி திட்டத்தின் இரண்டாம் கட்டம் மார்ச் 1ஆம் தேதியிலிருந்து தொடங்கவிருப்பதால் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 முதல் 60 வயது வரை இணை நோயுடன் இருப்பவர்கள் என 1.60 கோடி பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மார்ச் 1ஆம் தேதி முதல் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

மார்ச் 1 முதல் இலவச கொரோனா தடுப்பூசி… யாருக்கு போடப்படும்? – அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. கொரோனா பாதிப்புடன் அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு யாரும் வந்துவிடக் கூடாது என்பதற்காக சுகாதாரத் துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. பிற மாநிலங்களில் இருந்து வேலை ரீதியாக தமிழகம் வருபவர்கள் 72 மணி நேரத்தில் மீண்டும் தங்கள் மாநிலத்துக்கே திரும்பிச் செல்ல எந்த தடையும் இல்லை. அதேநேரம், வேலை ரீதியாக தமிழகம் வந்தவர்கள், இங்கேயே சில நாட்கள் தங்கினால் அவர்கள் கட்டாயம் 7 நாட்கள் வீட்டுக் கண்காணிப்பில் இருக்க வேண்டும். இதை சுகாதாரத் துறை கண்காணிக்கும்” என்றார்.