செல்போனில் அடிக்கடி பேசிய மனைவியை கொன்ற 2வது கணவன்!!

 

செல்போனில் அடிக்கடி பேசிய மனைவியை கொன்ற 2வது கணவன்!!

சந்தேகத்தால் 2வது கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நாச்சியார்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் எழில் செல்வி. இவருக்கும் நயினார்குப்பத்தை சேர்ந்த சிவா என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்கள் குடும்பத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். நயினார்குப்பம் கிராமத்தில் வசித்து வந்த தம்பதிக்கு 2 வயதில் கன்சிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

செல்போனில் அடிக்கடி பேசிய மனைவியை கொன்ற 2வது கணவன்!!

இதையடுத்து சிவாவுடன் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்த ஐயப்பன் என்பவருடன் எழில் செல்விக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். அத்துடன் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு எழில் செல்வி தனது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறி ஐயப்பனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். உளுந்தூர்பேட்டை கந்தசாமி புரத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.இதனிடையே அவமானம் தாங்க முடியாமல் சுற்றித்திரிந்த சிவா தனது சொந்த ஊரை விட்டு விட்டு தேனி மாவட்டம் கம்பத்தில் லாரி ஓட்டுவதற்காக சென்றுவிட்டார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு லாரி ஓட்டுனராக பணியில் சேர்ந்தார் ஐயப்பன். கடந்த 3ஆம் தேதி பணி முடிந்து வீடு திரும்பிய நிலையில் தனது மனைவிக்கு உடல்நிலை சரிஇல்லை எனவும் மயக்க நிலையில் உள்ளதாகவும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஒரு ஆட்டோ எடுத்து வருமாறு நண்பரை வரவழைத்துள்ளார். இதையடுத்து எழில் செல்வியை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் . ஆனால் அதில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அத்துடன் அவரது கழுத்தில் காயங்கள் இருந்ததால் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஐயப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.

செல்போனில் அடிக்கடி பேசிய மனைவியை கொன்ற 2வது கணவன்!!

தனது மனைவியின் செல்போனின் அடிக்கடி பிஸி என்று வரும். இதுகுறித்து நான் கேட்டபோது அவர் மழுப்பலாக பதில் கூறி வந்தார். அதனால் என்னிடம் பேசியது போல வேறு யாரிடமும் பேசுகிறாளோ என்று எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. சம்பவத்தன்று இரவு நான் என் மனைவிக்கு போன் செய்தேன் . அப்போது அவர் நம்பர் பிஸியாக இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த நான் போனை பிடித்து பார்த்தபோது, அதில் நம்பர் அளிக்கப்பட்டிருந்தது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் நான் அவள் கழுத்தை நெரித்தேன். அதில் மூச்சுத்திணறி அவர் இறந்துவிட்டார் என்று கூறியுள்ளனர். இதை தொடர்ந்து ஐயப்பன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.