கேள்வி நேரத்துடன் தொடங்கியது 2ம் நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடர்!

 

கேள்வி நேரத்துடன் தொடங்கியது 2ம் நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடர்!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கேள்வி நேரத்துடன் சற்று முன்னர் தொடங்கியுள்ளது.

கொரோனா பாதிப்பால் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதன்முறையாக சென்னை சேப்பாக்கத்தில் இருக்கும் கலைவாணர் அரங்கில் நடத்தப்படும் என்றும் செப்.14 முதல் செப்.16 வரை 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன் படி நேற்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியது. இதனிடையே நீட் தேர்வு, குடியுரிமை, சுற்றுச்சூழல் வரைவறிக்கை உள்ளிட்ட சமூக பிரச்னைகள் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்குமாறு திமுக சார்பில் சட்டப்பேரவையில் மனு அளிக்கப்பட்டது.

கேள்வி நேரத்துடன் தொடங்கியது 2ம் நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடர்!

தொடக்கத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், காங்கிரஸ் எம்பி வசந்த்குமார் உள்ளிட்ட பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கையை சபாநாயகர் தனபால் நிராகரித்து விட்டார். அதனைத்தொடர்ந்து கூட்டத்தொடர் நாளை நடைபெறும் என சபாநாயகர் அறிவித்தார்.

இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ம் நாள் கேள்வி நேரத்துடன் தொடங்கியுள்ளது. கூட்டத்தொடரின் முக்கியமான நாளான இன்று பல விவகாரங்கள் குறித்தும் விவாதிகப்பட உள்ளது.