Home க்ரைம் இனிமே வீடியோ வெளியிட மாட்டேன்: என் வயசு பொண்ணுகளும் வீடியோ வெளியிட வேணாம்.. ’2k கிட்ஸ்’ சிறுமி

இனிமே வீடியோ வெளியிட மாட்டேன்: என் வயசு பொண்ணுகளும் வீடியோ வெளியிட வேணாம்.. ’2k கிட்ஸ்’ சிறுமி

ஒரு வருடத்திற்கு மேலாக பள்ளிகள் இயங்காததால் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருவதால் மாணவ, மாணவிகள் செல்போனிலும் இணையங்களிலும் மட்டுமே மூழ்கி இருக்கின்றனர். பாட நேரம் போக மற்ற நேரங்களிலும் செல்போனிலும் இணையங்களிலும் மாணவ-மாணவிகள் மூழ்கி இருப்பதுதான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இனிமே வீடியோ வெளியிட மாட்டேன்: என் வயசு பொண்ணுகளும் வீடியோ வெளியிட வேணாம்.. ’2k கிட்ஸ்’ சிறுமி
இனிமே வீடியோ வெளியிட மாட்டேன்: என் வயசு பொண்ணுகளும் வீடியோ வெளியிட வேணாம்.. ’2k கிட்ஸ்’ சிறுமி

எப்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டதோ அன்று முதலே மாணவ மாணவிகள் எந்நேரமும் செல்போன், லேப்டாப் கதியாகவே இருக்கின்றனர். ஆனால் அவர்கள் எந்நேரமும் பாடங்கள் படிப்பதில்லை. பெரும்பாலான மாணவர்கள் ஆன்லைன் கல்வி என்பதை தவறாக பயன்படுத்திக் கொண்டு எப்போதும் செல்போனும் கையுமாக இருந்து நேரத்தை தவறான வழிகளில் செலவழிக்கின்றனர்.

அப்படித்தான் ஒரு சிறுவனும் சிறுமியும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சினிமா பாடல்களுக்கு டப் செய்து வீடியோக்களை வெளியிட்டு அதன்மூலம் இருவருக்குள்ளும் நட்பாகி பின்பு அது காதலாகி தங்களின் காதல் வீடியோக்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியதால் இன்று அது போலீஸ் வரை சென்று கைதாகும் நிலையில் இருவரும் மன்னிப்பு கேட்டுக் கொண்டு இனி அப்படி வீடியோக்களை பதிவிட மாட்டோம் என்று உறுதியளித்துள்ளனர்.

இனிமே வீடியோ வெளியிட மாட்டேன்: என் வயசு பொண்ணுகளும் வீடியோ வெளியிட வேணாம்.. ’2k கிட்ஸ்’ சிறுமி

கோடம்பாக்கத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனும், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் சேர்ந்த 14 வயது சிறுமியும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எதார்த்தமாக சினிமா பாடல்களுக்கு டப் செய்து வீடியோ வெளியிட, அதற்கு விழுந்த லைக்குகளை பார்த்து தங்களுக்கு வந்த புகழ் போதைக்கு அடிமையாகி மேலும் மேலும் வீடியோக்களை பதிவேற்றி வந்தனர். இதனால் கோடம்பாக்கம் சிறுவனுக்கும் நெல்லிக்குப்பம் சிறுமிக்கும் இடையே நட்பு உண்டானது. இந்த நட்பின் காரணமாக தனது நண்பர்களுடன் சிறுமியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார் அச்சிறுவன்.

அப்போது பெற்றோரும் சிறுவனுக்கும் அவனது நண்பர்களுக்கும் தடபுடலாக விருந்து வைத்துள்ளனர். இந்த விருந்தின்போது சிறுமிக்கு ஒரு மோதிரத்தை பரிசளித்த சிறுவன் தான் அச்சிறுமியை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவரும் தாங்கள் காதலிப்பதாகவும் தங்கள் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் வீடியோக்களை வெளியிட்டு அதிரவைத்தனர் சிறுவனும் சிறுமியும்.

இனிமே வீடியோ வெளியிட மாட்டேன்: என் வயசு பொண்ணுகளும் வீடியோ வெளியிட வேணாம்.. ’2k கிட்ஸ்’ சிறுமி

அத்தை, மருமகளே, மருமகனே என்று இரு வீட்டாரும் அழைத்துக்கொள்ளும் வீடியோக்களும் வெளியாகி மேலும் அதிரவைத்தன. காதலியின் பெயரை பச்சை குத்தி இருப்பதாகவும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்ததால் இதைப் பார்த்த பலரும் சிறுவன் சிறுமி இப்படி காதலிப்பதை சமூகவலைத்தளத்தில் வருவதை ஆதரித்தால், இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று கொதித்தார்கள்.

இந்த விவகாரம் அறிவித்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவின் எஸ்.பி ஜெயஸ்ரீ மற்றும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவி சரண்யா மற்றும் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் ராதிகா உள்ளிட்டவர்கள் சம்பந்தப்பட்ட சிறுமியை தொடர்பு கொள்ள முயற்சித்தனர்.

இனிமே வீடியோ வெளியிட மாட்டேன்: என் வயசு பொண்ணுகளும் வீடியோ வெளியிட வேணாம்.. ’2k கிட்ஸ்’ சிறுமி

அந்த சிறுமியின் இன்ஸ்டாகிராம் ஐ.பி முகவரி மூலம் சிறுமியின் வீட்டை கண்டுபிடித்து விட்டனர். சிறுமியாக இருந்து கொண்டு இப்படியான செயல்களை செய்து வருவதால் அச்சிறுமியை நன்னடத்தை கருதி காப்பகத்தில் விடப் போவதாக எச்சரிக்கை விடவே , இனி இப்படி செய்ய மாட்டேன் என்று மன்னிப்பு கேட்டிருக்கிறார் அந்தச் சிறுமி. பெற்றோரும் மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள்.

அச்சிறுமி தன் தவறை உணர்ந்து புகழுக்காக எப்படி செய்து விட்டேன். இனி அப்படி செய்ய மாட்டேன் என்று வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் . என் வீடியோக்களை பார்த்த எனது வயது உடைய சில பெண்களும் இது மாதிரியான வீடியோக்களை வெளியிடப் போவதாக சொல்லி இருக்கிறீர்கள். அது தவறு அது தவறு தவறு என்பதை நான் இப்போது உணர்ந்து விட்டேன். நீங்களும் இந்த தவற்றை செய்துவிடாதீர்கள். நானும் இதுபோன்ற வீடியோக்களை பதிவிட மாட்டேன் என்று உறுதி கூறியிருக்கிறார். இந்த வீடியோவும் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இனிமே வீடியோ வெளியிட மாட்டேன்: என் வயசு பொண்ணுகளும் வீடியோ வெளியிட வேணாம்.. ’2k கிட்ஸ்’ சிறுமி
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

பஞ்சாப் காங்கிரஸை வேறு யாராவது பலப்படுத்த முடியுமானால் என்னை நீக்குங்க.. சுனில் ஜாகர்

பஞ்சாப் காங்கிரஸை வேறு யாராவது பலப்படுத்த முடியுமானால் என்னை தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று நான் ஆரம்பம் முதலே சொல்லி வருகிறேன் என சுனில் ஜாகர் தெரிவித்தார்.

பீகார் பா.ஜ.க. கூட்டணிக்குள் விரிசல்?.. ஜிதன் ராம் மாஞ்சியுடன் லாலு பிரசாத் மூத்த மகன் ரகசிய சந்திப்பு

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜிதன் ராம் மாஞ்சியை, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ்...

கடவுளின் அவதாரம் அழைத்துக்கொள்ளும் சிவசங்கருக்கு மீண்டும் சம்மன்

கடவுளின் அவதாரம் என தன்னை அழைத்துக் கொள்ளும் சிவசங்கர் பாபா மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்காக அவருக்கு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

காஷ்மீர் விவகாரம்.. திக்விஜய சிங் பேசிய ஆடியோவை வெளியிட்ட பா.ஜ.க… சிக்கலில் காங்கிரஸ்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீரின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்யும் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங், பாகிஸ்தான் செய்தியாளரிடம் பேசிய ஆடியோ ஒன்றை...
- Advertisment -
TopTamilNews