சிறுமிக்கு 2 முறை திருமணம் – கணவன்கள் போக்சோவில் கைது

 

சிறுமிக்கு 2 முறை திருமணம் – கணவன்கள் போக்சோவில் கைது

கோவை சரவணம்பட்டியை சேர்ந்த தம்பதியினர், 15 வயது மகளுக்கு கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். சிறுமி என்று தெரிந்திருந்தும் திண்டுக்கல்லைச்சேர்ந்த வெல்டிங் தொழிலாளி அவரை திருமணம் செய்துகொண்டார்.

சிறுமியின் திருமணம் குறித்து யாரும் புகார் தெரிவிக்காததால் அப்போது எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.

சிறுமிக்கு 2 முறை திருமணம் – கணவன்கள் போக்சோவில் கைது

கணவனுடன் அந்த சிறுமியும் வாழ்ந்து வந்த நிலையில், உறவினர் ஒருவர் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால், அவருக்கு உதவியாக மருத்துவமனையில் தங்கி இருந்திருக்கிறார். முத்தூர் பகுதி்யை சேர்ந்த சிவா(25) என்ற இளைஞரும் விபத்தி அடிபட்டு அங்கே சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியிருக்கிறது.

மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்ததும் செல்போனில் இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டு வந்துள்ளனர். இதைப்பார்த்துவிட்ட கணவர் கண்டித்ததும், சண்டை போட்டுக்கொண்டு தாய்வீட்டுக்கே சென்றுவிட்டார் சிறுமி.

திடீரென ஒருநாள் தாய் வீட்டில் இருந்த சிறுமி காணாமால் போகவே, சரவணம்பட்டி போலீசில் புகார் கொடுக்கவும், போலீசார் விசாரணையில் கொடைக்கானல் மச்சூரில் சிறுமி இருக்கும் தகவல் கிடைத்தது. அங்கே சென்றதும், சிவாவுடன் இரண்டாவது திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

இதன்பின்னர்தான் போலீசார் அதிரடி முடிவை எடுத்தனர். சிறுமியை முதலியை திருமணம் செய்தவரையும், இரண்டாவதாக திருமணம் செய்தவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மேலும், பெற்றோர் மீது குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.