Home அரசியல் சூடுபிடிக்கும் 2ஜி வழக்கு – தோல்வி பயத்தில் திமுக

சூடுபிடிக்கும் 2ஜி வழக்கு – தோல்வி பயத்தில் திமுக

இந்தியாவையே உலுக்கிய 2ஜி ஊழல் வழக்கை வரும் அக்டோபர் 5 முதல் தினந்தோறும் விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது ஒட்டுமொத்த திமுகவையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ‘’தேர்தல் நெருங்கும் நிலையில் மறுபடியுமா!’’ என தலையிலடித்துக் கொள்கிறார்கள் அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகிகள்.

கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த வழக்கிலிருந்து திமுகவைச் சேர்ந்த கனிமொழி, அ.ராசா உள்ளிட்டவர்களை டெல்லி சிபிஐ தனி நீதிமன்றம் விடுவித்தது. இதனை எதிர்த்து சிபிஐ சார்பிலும், அமலாக்கத்துறை சார்பிலும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த மனுக்களைத் தூசி தட்டி, வழக்கை விரைந்து விசாரணை செய்ய இரண்டு மத்திய அமைப்புகள் சார்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரிஜேஷ் சேத்தி, வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நாள்தோறும் விசாரணை நடைபெறும் என அறிவித்துள்ளார். டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி நடவடிக்கை ஒட்டுமொத்த திமுகவையும் உலுக்கியுள்ளது.

கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் முக்கிய பேசு பொருளாக 2ஜி ஊழல் விவகாரம்தான் இருந்தது. ஏறத்தாழ 1 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அப்போது மத்தியில் திமுக சார்பில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவர் அ.ராசா என்ற வகையில் இந்த மெகா ஊழல் திமுகவிற்கு அழியாத களங்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அந்தத் தேர்தலில் நாடு முழுக்க காங்கிரசும், தமிழகத்தில் திமுக கூட்டணியும் மிகப் பெரிய தோல்வியை சந்தித்தன.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் 2ஜி வழக்கு சூடுபிடிக்கத் தொடங்கியிருப்பது மீண்டும் அதே காட்சிகள் ரிப்பீட் ஆகுமோ! என்கிற நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய திமுகவிலிருந்து சற்று ஒதுங்கியிருக்கும் மூத்த தலைவர் ஒருவர், ’’2014ல் மத்திய ஆட்சி அதிகாரம் என பாஜக இந்தளவிற்கு வலிமையோடு இல்லை. இப்போது அந்தக் கட்சி அசுர வலிமையோடு இருக்கிறது. இதனால் மீடியா உள்ளிட்டவற்றின் உதவியுடன் முன்பைவிட 2ஜி விவகாரத்தை மக்களிடையே கொண்டுசெல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது. கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் 2ஜி ஊழலை மிகக் கடுமையாக எதிர்த்திருக்கின்றன. இப்போது அந்தக் கட்சிகள் எப்படி சப்பைக்கட்டு கட்டப் போகின்றன என்பதைப் பார்க்க வேண்டும்.

பாஜக பின்புலத்தில் 2ஜி ஊழல் தொடர்பான செய்திகள் மீண்டும் புயல் வேகத்தில் வெளிக் கிளம்பும்போது அதை சமாளிப்பது திமுகவிற்கு பெரும் சவாலாகவே இருக்கும்.

ஆக மொத்தத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கப் போவதாக கதை அளந்துவரும் திமுகவின் கழுத்தில் கத்தியை வைத்திருக்கிறது 2ஜி வழக்கு’’ என்றார்

மாவட்ட செய்திகள்

Most Popular

திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப் ஒரு குட்டி ஹிட்லர்.. கம்யூனிஸ்ட் கட்சி தாக்கு

திரிபுராவிலிருந்து கம்யூனிஸ்டுகளை வேரறுக்க என்ற திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப்பை குட்டி ஹிட்லர் என்று கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்தது. திரிபுராவில் முதல்வர் பிப்லாப் குமார்...

சி.பி.ஐ.க்கு செக் வைச்ச உத்தவ் தாக்கரே அரசு.. மகாராஷ்டிராவில் இனி வழக்குகளை விசாரிக்க மாநில அரசின் அனுமதி அவசியம்

மகராஷ்டிராவில் வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க அளித்து இருந்த ஒப்புதலை முதல்வர் உத்தவ் தாக்கரே அரசு திரும்பபெற்றுள்ளது. மேலும் இங்கு வழக்குகளை விசாரிக்க முதலில் மாநில அரசின் அனுமதி பெற வேண்டும்...

கையை மட்டும் கழுவிக்கலாம்…. பாத்திரங்கள், டிபன் பாக்ஸ் கழுவ கூடாது… நாடாளுமன்ற பணியாளர்களுக்கு உத்தரவு

நாடாளுமன்ற வளாகத்தில் பாத்திரங்கள் மற்றும் டிபன் பாக்ஸ்களை கழுவ கூடாது என்று அங்கு பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில்...
Do NOT follow this link or you will be banned from the site!