திமுக 2வது நாள் வேட்பாளர் நேர்காணல்

 

திமுக 2வது நாள்  வேட்பாளர் நேர்காணல்

சட்டமன்ற தேர்தலில் திமுகவில் விருப்பமனு கொடுத்தவர்களிடம் கட்சி நிர்வாகிகள் நேர்காணல் நடத்தி வருகின்றனர். நேற்று அண்ணா அறிவாலயத்தில் தொடங்கிய நேர்காணல் 2வது நாளாக இன்றைக்கும் தொடர்கிறது.

இன்று காலையில் நேர்காணல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

திமுக 2வது நாள்  வேட்பாளர் நேர்காணல்

நேற்று முதல் வரும் 6ம் தேதி வரையிலும் மாவட்ட வாரியாக பிரித்து இந்த நேர்காணல் நடைபெற இருக்கிறது. நேற்று மார்ச் 2 செவ்வாய் காலை 8 மணி- கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தெற்கு, திருநெல்வேலி கிழக்கு, மத்திய, தென்காசி வடக்கு, தெற்கு ராமநாதபுரம் ஏரியாவுக்கும், மாலை 4 மணி- விருதுநகர் வடக்கு, தெற்கு, சிவகங்கை, தேனி வடக்கு, தெற்கு திண்டுக்கல் கிழக்கு, மேற்கு ஏரியாவில் இருந்து விருப்பமனு கொடுத்தவர்களுகும் நேர்காணல் நடைபெற்றது.

இன்றைக்கு மார்ச் 3 புதன் காலை 9 மணிக்கு தொடங்கிய நேர்காணல் மதுரை வடக்கு, தெற்கு, மதுரை மாநகர் வடக்கு, தெற்கு நீலகிரி, ஈரோடு வடக்கு, தெற்கு. மாலை 4 மணி- திருப்பூர் மத்திய, வடக்கு, திருப்பூர் கிழக்கு, தெற்கு கோவை கிழக்கு, வடக்கு, தெற்கு கோவை மாநகர் கிழக்கு, மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு ஆகிய பகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறுகிறது.

திமுக 2வது நாள்  வேட்பாளர் நேர்காணல்

நாளைய தினம் மார்ச் 4ம் தேதி வியாழன் காலை 9 மணிக்கு தருமபுரி கிழக்கு, மேற்கு நாமக்கல் கிழக்கு, மேற்கு, சேலம் கிழக்கு, மேற்கு, மத்திய புதுக்கோட்டை வடக்கு, தெற்கு, மாலை 4 மணிக்கு கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி வடக்கு, மத்திய, தெற்கு, திருவாரூர், நாகை வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளுக்கும், மார்ச் 5 வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணிக்கு தஞ்சை வடக்கு, தெற்கு, மத்திய, கடலூர் கிழக்கு, மேற்கு கள்ளக்குறிச்சி வடக்கு, தெற்கு விழுப்புரம் வடக்கு, மத்தியம்,
மாலை 4 மணி – திருவண்ணாமலை வடக்கு, தெற்கு, வேலூர் கிழக்கு, மேற்கு, மத்திய காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளுக்கும்,

மார்ச் 6 ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு திருவள்ளூர் கிழக்கு, மத்திய, மேற்கு, சென்னை வடக்கு, வடகிழக்கு, சென்னை கிழக்கு, தெற்கு சென்னை மேற்கு, தென்மேற்கு மற்றும் மாலை 4 மணிக்கு புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெற இருக்கிறது.

இது ஒருபுறமிருக்க, கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தையிலும் திமுக மும்முரமாக செயல்பட்டு வருகிறது.