மே-2க்கு முன்னரே வாக்கு எண்ணிக்கையா? அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு

மே-2க்கு முன்னரே வாக்கு எண்ணிக்கையா? அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு

மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கின்ற நிலையில், இது கொரோனா காலமென்பதால் மருத்துவ விதிகளுக்குட்பட்டு வாக்கு எண்ணிக்கையை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.

மே-2க்கு முன்னரே வாக்கு எண்ணிக்கையா? அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு

இது ஒருபுறமிருக்க வாக்கு எண்ணிக்கைக் காண மேசைகள் குறைக்கப்பட இருக்கின்றன என்றும், தபால் ஓட்டுகள் மே ஒன்னாம் தேதியே பிரிக்கப்பட்டு வரிசைப்படுத்தி வைக்கப்பட இருக்கின்றன என்ற தகவல் பரவியதை அடுத்து அமைச்சர் ஜெயக்குமார் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வைத்து மனு ஒன்றை அளித்தார்.

மே-2க்கு முன்னரே வாக்கு எண்ணிக்கையா? அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு

அம்மனுவில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி வாக்கு எண்ணும் நாளில் மட்டுமே தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும். அதற்கு முன்னதாக எண்ணப் படக்கூடாது. கடந்தகால வழிமுறைகள் தான் கடைபிடிக்க வேண்டும். மே 1ஆம் தேதியை தபால் வாக்குகள் கட்டுகள் பிரிக்கப்பட்டு வரிசைப்படுத்தி வைக்க உள்ளதாக சில மாவட்டங்களில் இருந்து அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர். யாரும் எவ்வித குறையும் இல்லாத அளவுக்கு தேர்தல் ஆணையம் செயல்படும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. வாக்கு எண்ணிக்கையில் மேசைகள் எந்த காரணம் கொண்டும் குறைக்கப்பட கூடாது’’ என்று தெரிவித்துள்ளார்.