மாஜி முதல்வர் எடப்பாடியாருக்கு பிறந்த நாள்: வாழ்த்தியது 2 பேர்

 

மாஜி முதல்வர் எடப்பாடியாருக்கு பிறந்த நாள்: வாழ்த்தியது 2 பேர்

கடந்த பிறந்த தினத்தின் போது டெல்லி முதற்கொண்டு சினிமா பிரபலங்கள் வரைக்கும் பலரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறினர். ஆட்சி அதிகாரம் இல்லாத ஒரு மாஜியின் சூழல் எப்படி இருக்கும் என்பதை காட்டுகிறது இன்றைய தினம்.

மாஜி முதல்வர் எடப்பாடியாருக்கு பிறந்த நாள்: வாழ்த்தியது 2 பேர்

முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு இரண்டு பேர் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

’’தமிழக முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்’’ என்று தெரிவித்துள்ளார் பாஜக தேசிய மகளிரணி செயலாளரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன்.

’’இன்று பிறந்த நாள் காணும் மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதல்வர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி
அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நீண்ட ஆயுளோடும், நல்ல ஆரோக்கியத்தோடும் தொடர்ந்து மக்கள் சேவையாற்ற இறைவனை பிரார்த்திக்கின்றேன்.’’என்று வாழ்த்தியுள்ளார் முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி.