நார்வேயில் ‘ஃபைசர்’ கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 29 பேர் மரணம் – காரணம் என்ன?

நார்வேயில் ‘ஃபைசர்’ கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 29 பேர் மரணம் – காரணம் என்ன?

நார்வேயில் கொரோனாவுக்கு எதிரான ஃபைசர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 29 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இறந்தவர்கள் அனைவருக்கும் 65 வயதுக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதில் 13 நபர்களுக்கு 80 வயது இருக்கலாம் என்று அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நார்வேயில் ‘ஃபைசர்’ கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 29 பேர் மரணம் – காரணம் என்ன?

இவர்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டதால் பக்கவிளைவு ஏற்பட்டு, அதன் தீவிரம் அதிகமாகி அல்லது தாங்க முடியாமல் உயிரிழந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காய்ச்சல், குமட்டல் உள்ளிட்ட சிறுசிறு பக்கவிளைவுகளைத் தாங்கி கொள்ள முடியாத வயோதிக பிரச்சனையால் இறந்திருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நார்வேயில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஃபைசர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அவர்களில் 29 பேருக்கு காய்ச்சல் போன்ற சிறு பக்க விளைவுகள் ஏற்பட்டு உயிரிழந்திருக்கின்றனர். பெரும்பாலோனோர் அலர்ஜி ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மற்றவர்களையும் சுகாதாரத் துறையினர் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர்.

நார்வேயில் ‘ஃபைசர்’ கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 29 பேர் மரணம் – காரணம் என்ன?

இதன்மூலம் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு ஒவ்வாமை இருக்கிறதா என்பதைப் பரிசோதித்து பின்னர் தடுப்பூசி போட்டுவது குறித்து ஆலோசிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.