285 கிமீ வேகத்தில் டோரியன் புயல், ஃப்ளோரிடாவுக்கும் விசிட் அடிக்கலாம்!

 

285 கிமீ வேகத்தில் டோரியன் புயல், ஃப்ளோரிடாவுக்கும் விசிட் அடிக்கலாம்!

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தையும் டோரியன் தாக்கும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், தனது அரசுமுறை போலந்து பயணத்தை ட்ரம்ப் ரத்து செய்துள்ளார்.

கரீபியன் தீவு அருகே மையம் கொண்டிருந்த சக்திவாய்ந்த டொரியன் புயல், பஹாமாஸ் அருகே கரையைக் கடக்கும் என எச்சரிக்கை விடப்பட்டத்தையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. ஐந்தாம் நிலை புயலாக அறிவிக்கப்பட்டிருந்த டோரியன் புயல் நேற்று காலை அபாகோ தீவில் கரையைக் கடந்தபோது மணிக்கு 285 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. புயலின் வேகம் காரணமாக மரங்கள் பேயாட்டம் ஆடின. கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு கடலோரக் குடியிருப்புகள் அலைகளால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. தற்போது அபாகோ தீவில் புயல் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புயலின் கண் பகுதி டோரியன் புயல் இன்று இல்லது நாளை பஹாமஸ் தீவுகளைத் தாக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Dorian effects in Abaco Islands

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தையும் டோரியன் தாக்கும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், தனது அரசுமுறை போலந்து பயணத்தை ட்ரம்ப் ரத்து செய்துள்ளார். முன்னதாக இதேபோன்ற சக்திவாய்ந்த புயல் கடந்த 1992ம் ஆண்டு பஹாமாவை தாக்கியபோது 65 பேர் உயிரிழந்தனர். ஏறத்தாழ 65 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் டோரியன் புயலின் தாக்கம் அதிகம் இருக்கக் கூடும் என்ற தகவலால் கடலோரப் பகுதிகளில் குடியிருக்கும் 10 லட்சத்திற்கும் அதிகமானோரை பாதுகாப்பான இடங்களுங்குச் செல்லுமாறு மாகாண நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஃபுளோரிடா, ஜார்ஜியா மற்றும் கரோலினா ஆகிய பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது