Home அரசியல் வைகோ மகன் துரை வையாபுரிக்கு முக்கிய பதவி

வைகோ மகன் துரை வையாபுரிக்கு முக்கிய பதவி

மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர்கள் நாசரேத் துரை மற்றும் தஞ்சாவூர் துரை பாலகிருஷ்ணன் ஆகியோர் உடல்நலக்குறைவு காரணமாக அண்மையில் உயிரிழந்தனர். அதனால் இவ்விருவரும் வகித்து வந்த பதவி யாருக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு கட்சியில் பலமாக இருக்கிறது.

வைகோ மகன் துரை வையாபுரிக்கு முக்கிய பதவி
வைகோ மகன் துரை வையாபுரிக்கு முக்கிய பதவி

கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் வெற்றி, மதிமுக உயர்நிலைக் குழு உறுப்பினர் புலவர் ஆகியோர் இப்பதவியை பெற கடும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல். ஆனால் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் வைகோவின் மகன் வையாபுரிக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவியை வழங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

வைகோவின் உடல்நலம் கருதி அவர்கள் இந்த விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். வைகோ அரசியலிலிருந்து ஓய்வு பெறுகின்ற நேரத்தில் அவர் வகித்து வரும் பொதுச் செயலாளர் பதவியை துரை வையாபுரி ஏற்க வேண்டும் என்றும், அதற்கு முன்னோட்டமாகத்தான் துணைப் பொதுச் செயலாளர் பதவியை ஏற்க வைத்து விட வேண்டும் என்றும் கட்சியின் நிர்வாகிகள் சிலர் விருப்பம் தெரிவித்து வருகிறார்களாம்.

வைகோ மகன் துரை வையாபுரிக்கு முக்கிய பதவி

அதனால்தான் அரசியலில் இருந்து கொஞ்சம் விலகி இருந்த துரை வையாபுரியை நடந்த சட்டசபை தேர்தலில் பிரச்சாரம் செய்ய வைத்துள்ளனர். அதன் பின்னரும் மதிமுகவின் பேனர் , போஸ்டர்களில் எல்லாம் வைகோவுக்கு இணையாக வையாபுரியின் படமும் இடம்பெற்று வருகின்றன.

வைகோ பங்கேற்க இயலாத கட்சி நிகழ்வுகளி, கட்சியினரின் விழாக்களில் பங்கேற்று வருகிறார் துரை வையாபுரி. அரசியலில் நெருக்கமாக இருந்து மதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை ஏற்க வைக்க வேண்டும் என்பதற்காகவே இத்தனையும் செய்யப்பட்டு வருவதாக கட்சியினர் சிலர் தெரிவித்துள்ளதாக தகவல்.

வைகோ மகன் துரை வையாபுரிக்கு முக்கிய பதவி
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகையின் கார்விபத்து சம்பவம்#YashikaAnand

நள்ளிரவில் நடந்த கார் விபத்தில் கார் அப்பளமாக நொறுங்கியதில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் வந்த தோழி வள்ளிசெட்டி பவணி சம்பவ இடத்திலேயே...

தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்: பிணவறை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் என்ஜினியர்கள்!

நாடெங்கிலும் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிறகு பலர் தங்களது வேலையை இழந்து உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் கிடைத்த வேலைக்கு...

இடஒதுக்கீடு உரிமைகளுக்காக போராடியும் வாதாடியும் வரும் ராமதாஸ் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன் – முதல்வர் ஸ்டாலின்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசியல் உரிமைகளுக்காக போராடியும் வாதாடியும் வரும் அவர் நீண்ட காலம்...

அந்த லிங்க்கை தொட்டால்… வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்படும் – போலீஸ் எச்சரிக்கை!

ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் புழக்கம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இது பல மோசடிகளுக்கு வழிவகுத்துள்ளது. ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலமாக வங்கி கணக்குகளில் இருந்து ஆயிரக்கணக்கில் கொள்ளையடிக்கும் கும்பல்கள் பெருகியுள்ளன. இந்த...
- Advertisment -
TopTamilNews