லியோனிக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்திருக்கும் இன்னொரு பணி

 

லியோனிக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்திருக்கும் இன்னொரு பணி

பட்டிமன்றப் பேச்சாளரும் முன்னாள் பள்ளி ஆசிரியருமான திண்டுக்கல் ஐ. லியோனிக்கு தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பதவியை வழங்கிய முதல்வர் ஸ்டாலின் அவருக்கு தற்போது முக்கிய பணி ஒன்றை வழங்கி இருப்பதாக லியோனியை மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கிறார்.

லியோனிக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்திருக்கும் இன்னொரு பணி

தமிழ்நாடு பாடநூல் கழக புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கும் கிடங்கு திருவள்ளூரில் அமைந்திருக்கிறது. அந்த கிடங்கினை திண்டுக்கல் ஐ. லியோனி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’ தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்டதில் இருந்து மாநிலம் முழுவதும் சென்று ஆய்வு செய்து வருகிறேன். திருவள்ளூர் புத்தக கிடங்கிலிருந்து 860 பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி விரைந்து நடைபெற்று வருகிறது. இதுவரைக்கும் 400 பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன என்று அவர் தெரிவித்தார்.

லியோனிக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்திருக்கும் இன்னொரு பணி

மேலும், ’’முதல்வர் ஸ்டாலின் தற்போது எனக்கு இன்னொரு பணியை கொடுத்திருக்கிறார். அதாவது பொறியியல் மற்றும் மருத்துவத்தை தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு புத்தகங்களை தமிழில் அச்சிட்டு கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் .

முதல்வரின் இந்த உத்தரவை நான் மிகப்பெரிய பொறுப்பாக எடுத்துக்கொண்டு கிராமப்புற மாணவர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் தாய்மொழியில் கல்லூரிக் கல்வியை படிக்க புத்தகங்கள் அச்சிட்டு வழங்க ஏற்பாடுகள் செய்து வருகிறேன். இதன் மூலமாக தாய் மொழியில் உயர் கல்வி கற்றல் என்ற பேரறிஞர் அண்ணா கலைஞர் ஆகியோரின் கனவை முதல்வர் நிறைவேற்றுகிறார்’’ என்று தெரிவித்தார்.