கரூரில் விரைவில் விமான நிலையம் – அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி

 

கரூரில் விரைவில் விமான நிலையம் – அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி

கரூர் மாவட்டம் கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பில் தொழில் முனைவோர் – நெசவாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கைக்தறி -ஜவுளி துறை அமைச்சர் காந்தியுடன், மின்சார துறைஅமைச்சர் செந்தில்பாலாஜியும் பங்கேற்றார்.

கரூரில் விரைவில் விமான நிலையம் – அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி

அமைச்சர் செந்தில்பாலாஜி இக்கூட்டத்தில் பேசியபோது, பேருந்துக்கு கூண்டு கட்டுதல், கொசுவலை, ஜவுளி துணி ஆகியவை கரூர் மாவட்டத்தில் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. ஆனால், ஜவுளித்துறைக்கு மிகவும் முக்கியமான சாயப்பட்டறை பூங்கா அமைக்க கடந்த காலத்தில் முடியாத நிலை இருந்தது. நம் முதல்வர் நிச்சயம் இதற்கு அனுமதி அளிப்பதோடு அல்லாமல் நிதியினையும் ஒதுக்குவார். விவசாயத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் அதே நேரத்தில் தொழில் வளர்ச்சியும் பெற வேண்டும் என்கிற நோக்கில் சாயப்பட்டறை பூங்கா அமைக்கப்படும் என்றார்.

கரூரில் விரைவில் விமான நிலையம் – அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி

கரூர் மாவட்டத்தில் உள்ள சலவை மற்றும் சாயப்பட்டறைகளை ஒருங்கிணைத்து, பொது சுத்தகரிப்பு நிலையம் அமைக்க நான் எடுத்த நடவடிக்கைகளை அடிமை அதிமுக அரசு முட்டுக்கட்டையிட்டது. மக்களுக்கு பயனான அத்திட்டத்தை முதல்வர் தலைவர் நல்லாட்சியில் நிறைவேற்றிட கரூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் கேட்டுக்கொண்டதுக்கு இணங்க, அத்திட்டம் நிறைவேறிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

அவர் மேலும், தேர்தல் அறிக்கையில் சொல்லி இருந்தது போலவே நூறு சதவிகிதம் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக கரூர் மாறும். தமிழ்நாடு முதல்வர் கரூர் மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி , கரூர் மாவட்டத்தில் ஜவுளி ஏற்றுமதி தொழில் வளர்ச்சியடைய விரைவில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.