அவர்களை கண்டுபிடித்துவிட்டேன்.. ‘அந்த’தண்டனை உறுதி – கமிஷனர் ஆபீஸில் வீரலட்சுமி பரபரப்பு

 

அவர்களை கண்டுபிடித்துவிட்டேன்.. ‘அந்த’தண்டனை உறுதி – கமிஷனர் ஆபீஸில் வீரலட்சுமி பரபரப்பு

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வந்த தமிழர் முன்னேற்ற படை அமைப்பின் நிறுவனர் வீரலட்சுமி, தனக்கு ஆபாச வீடியோ அனுப்பியவர்களின் முகவரியை கண்டுபிடித்தேன். அதுபற்றிய விபரங்களை சமர்ப்பித்துவிட்டேன். காவல்துறை இதில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், நான் முன்பே சொன்னபடி ‘அந்த’மாதிரியான தண்டனையை நிச்சயம் நானே நிறைவேற்றி விடுவேன் என்று அதிரவைத்தார்.

அவர்களை கண்டுபிடித்துவிட்டேன்.. ‘அந்த’தண்டனை உறுதி – கமிஷனர் ஆபீஸில் வீரலட்சுமி பரபரப்பு

ராமநாதபுரத்தைச் சேர்ந்த வீரலட்சுமி பல்லாவரம் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது மை இந்தியா பார்ட்டி சார்பில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல் நேரத்தில் தனது வாட்ஸப் நம்பருக்கு மர்ம நபர்கள் ஆபாச வீடியோக்கள் அனுப்பி வைத்துள்ளனர் என்று பரங்கிமலை போலீசில் புகார் அளித்தார். இதை அடுத்து ஒரு பரபரப்பு வீடியோ ஒன்றினையும் வீரலட்சுமி வெளியிட்டிருந்தார். ஆபாச வீடியோ தனக்கு அனுப்பியவர் யார் என்பது தெரியவில்லை. அனுப்பியவர்கள் அவர்களாகவே வந்து மன்னிப்பு கேட்டு விட வேண்டும். இல்லாவிட்டால் அவர்களை மூன்று நாளில் போலீசார் கைது செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் தானே அந்த நபர்களை கண்டுபிடித்து தூக்கிட்டு வந்து நிர்வாணமாக்கி பல்லாவரம் மார்க்கெட்டில் கட்டிவைத்து பிறப்புறுப்பையும் அறுத்து அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று பகீர் கிளப்பி இருந்தார்.

அவர்களை கண்டுபிடித்துவிட்டேன்.. ‘அந்த’தண்டனை உறுதி – கமிஷனர் ஆபீஸில் வீரலட்சுமி பரபரப்பு

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் வீரலட்சுமி. அந்த வீடியோவில், ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்களில் புகார் தந்து இருக்கிறேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . இப்போது வீடியோ அனுப்பிய நபர்கள் ஐந்து நாட்களுக்குள் போலீஸில் சரணடைய வேண்டும். அப்படி சரணடையாவிட்டால் அரபு நாடுகளில் பாலியல் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படுவதாக சொல்லப்படும் ’அந்த’ மாதிரி தண்டனை ஒன்றை நான் வழங்கப் போகிறேன் என்று எச்சரித்திருந்தார்.

அவர்களை கண்டுபிடித்துவிட்டேன்.. ‘அந்த’தண்டனை உறுதி – கமிஷனர் ஆபீஸில் வீரலட்சுமி பரபரப்பு

அந்த மாதிரி ஆபாச வீடியோ அனுப்பியவர்களுக்கு ’அந்த’ மாதிரி தண்டனை வழங்கியதற்காக தனக்கு வீரதீர செயல்களுக்கான விருதை வழங்க வேண்டும் என்றும் பேசி ’அந்த’ மாதிரி தண்டனை கொடுப்பதற்காக தயாராக அரிவாளுடன் நின்று போஸ் கொடுத்திருந்தார் வீரலட்சுமி.

இந்நிலையில், தனக்கு ஆபாச வீடியோக்கள் அனுப்பியவர்களின் முகவரிகளை அவராகவே கண்டுபிடித்து காவல்துறையிடம் சமர்ப்பித்திருக்கிறார். இதற்கு மேலும் காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால், நிச்சயமாக ‘அந்த’ மாதிரியான தண்டனையை தானே கொடுக்கப்போவதாக சொல்லி எச்சரித்திருக்கிறார்.