அமெரிக்காவில் ஒரே நாளில் 2,833 பேர் பலி – கொரோனா கோரம்

 

அமெரிக்காவில் ஒரே நாளில்  2,833 பேர் பலி – கொரோனா கோரம்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 6 கோடியே 48 லட்சத்து 45 ஆயிரத்து 560 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 49 லட்சத்து 42 ஆயிரத்து 114 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 14 லட்சத்து 99 ஆயிரத்து 355 பேர். 15 லட்சத்தை நெருங்கி விட்டது மரணங்களின் எண்ணிக்கை. தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,84,04,091 பேர்.

அமெரிக்காவில் ஒரே நாளில்  2,833 பேர் பலி – கொரோனா கோரம்

கொரோனா நோய்த் தொற்றில் ஆரம்பம் முதலே அதிக எண்ணிக்கையில் இருக்கும் நாடு அமெரிக்கா. அங்கு இதுவரை 1,43,13,941 கொரோனாவால் பாதிக்கப்பட்டிக்கிறார்கள். இவர்களில் 84,62,434 பேர் குணமாகி வீடு திரும்பி விட்டனர்.

ஆனால், 2,79,867 பேர் சிகிச்சை பலன் அளிக்காது இறந்துவிட்டனர். நேற்று மட்டுமே 2,831 பேர் இறந்த கொடுமையும் அமெரிக்காவில்தான்.

அமெரிக்காவில் ஒரே நாளில்  2,833 பேர் பலி – கொரோனா கோரம்

நேற்று மட்டுமே அமெரிக்காவில் 2,03,865 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. உலகிலேயே ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமான புதிய நோயாளிகள் அதிகரிப்பது அமெரிக்காவில்தான். அது தற்போது இரண்டு லட்சமாக அதிகரித்து விட்டது.

நவம்பர் 20-ம் தேதி 2,04,166 பேர் புதிய நோயாளிகளாகக் கண்டறியப்பட்டனர். நேற்று மீண்டும் இந்த எண்ணிக்கை இரண்டு லட்சத்தைக் கடந்திருக்கிறது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ், கலிபோர்னியா, ப்ளோரிடா, இல்லினோஸ் ஆகிய மாகாணங்களில்தான் அதிக நோய்த் தொற்று உள்ளது.