கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்தபோது.. ஆட்கள், கத்தி, அரிவாள் ஆயுதங்களுடன் பாய்ந்த கணவன்

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்தபோது.. ஆட்கள், கத்தி, அரிவாள் ஆயுதங்களுடன் பாய்ந்த கணவன்

திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காடு முத்தையன் பகுதியில் வசித்து வரும் மாணிக்கம், பனியன் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்தபோது.. ஆட்கள், கத்தி, அரிவாள் ஆயுதங்களுடன் பாய்ந்த கணவன்

இவரது மனைவிக்கும் பக்கத்து வீட்டு முருகேசனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. மாணிக்கம் வீட்டில் இல்லாத நேரத்தில் சுமை தூக்கும் தொழிலாளி முருகேசன் அடிக்கடி மாணிக்கம் வீட்டிற்குள் வந்து போவதை அக்கம் பக்கத்தினர் கவனித்துள்ளனர்.

இது மாணிக்கத்திற்கு தெரியவந்திருக்கிறது. மனைவியை அவர் கண்டித்து பார்த்திருக்கிறார் அவர் கேட்கவில்லை. இதனால் தனது தாய் மற்றும் உறவினர்களிடம் சொல்லி மனம் கலங்கியிருக்கிறார் மாணிக்கம். கையும் களவுமாக பிடித்து அடித்து கொன்றுவிடும் ஆவேசத்திற்கு வந்திருக்கிறார்கள்,

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்தபோது.. ஆட்கள், கத்தி, அரிவாள் ஆயுதங்களுடன் பாய்ந்த கணவன்

தென்னம்பாளயத்தில் வழக்கம் போல் மூட்டை தூக்கிக்கொண்டிருந்த முருகேசனுக்கு, வீட்டில் மாணிக்கம் இல்லை என்கிற தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து மாணிக்கம் வீட்டிற்கு சென்று அவரது மனைவியுடன் உல்லாசமாக இருந்திருக்கிறார்.

முருகேன் வீட்டிற்குள் சென்றுவிட்ட தகவல் கிடைத்ததும், மாணிக்கம் தாயார் இந்திராணி, மாணிக்கம் உறவினர் சத்யராஜ், நண்பர்கள் ரகுவரன், சுரேஷ், மாணிக்கத்தின் தந்தை பிச்சை ஆகியோர் அரிவாள், கத்தி, மரக்கட்டைகளுடன் வீட்டிற்குள் புகுந்திருக்கிறார்கள்.

உல்லாசமாக இருந்த முருகேன் திடீரென்று இத்தனை பேரை பார்த்ததும் தப்பித்து ஓட முயற்சித்திருக்கிறார். அவரை மரக்கட்டையால் அடித்து, அரிவாளால் வெட்டி, கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்தபோது.. ஆட்கள், கத்தி, அரிவாள் ஆயுதங்களுடன் பாய்ந்த கணவன்

இந்த சம்பவம் கடந்த 2016ம் ஆண்டில் நடந்திருக்கிறது. மாணிக்கம், சத்யராஜ், சுரேஷ், பிச்சை, இந்திராணி, ரகுவரன் ஆகிய 6 பேர் மீது கொலை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர் போலீசார்.

திருப்பூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில், தற்போது, 6 பேருக்கும் கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை, ஆயிரம் அபராதம் அளித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வீடு புகுந்து தாக்கிய குற்றத்திற்காக 1 வருட கடுங்காவல் தண்டனை, ஆயிரம் அபராதம், கொடிய ஆயுதங்களை பயன்படுத்திய குற்றத்திற்காக ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை அளித்து உத்தரவிட்டுள்ளார் மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்வர்ணம்.