எல்.முருகனை திரும்ப பெற வேண்டும் – குடியரசு தலைவருக்கு கோரிக்கை

 

எல்.முருகனை திரும்ப பெற வேண்டும் – குடியரசு தலைவருக்கு  கோரிக்கை

மத்திய இணை அமைச்சராக பதவி ஏற்றிருக்கும் எல். முருகன் பயோடேட்டாவில் கொங்குநாடு என்று குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் சர்ச்சைக்கும் விவாதத்திற்கும் உள்ளானது. இது குறித்த சர்ச்சை நீடித்துக் கொண்டிருந்த நிலையில், அது தட்டச்சுப் பிழை. தவறுதலாக நடந்துவிட்டதாக முருகன் விளக்கமளித்திருக்கிறார். ஆனாலும் அதன் பின்னரும் முருகனின் பயோடேட்டாவில் கொங்குநாடு என்று இருந்தது, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் விவாதங்களையும் எழுப்பி வருகிறது.

எல்.முருகனை திரும்ப பெற வேண்டும் – குடியரசு தலைவருக்கு  கோரிக்கை

இந்நிலையில் திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இதுகுறித்து கடுமையாக சாடியிருக்கிறார். ’’எல். முருகன் சட்டம் படித்தவர். அவர் கொங்கு நாடு என்று போட்டுக்கொள்ள எப்படி ஒப்புக்கொண்டார் எனக்கு என்று எனக்கு தெரியவில்லை. இந்திய வரைபடத்தில் கொங்கு நாடு என்ற ஒரு நாடு கிடையாது. இல்லாத ஒரு நாட்டை ரகசிய காப்பு பிரமாணம் விசுவாசப் பிரமாணம் எடுத்து மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்று உள்ளவர் போட்டிருப்பது மிகப்பெரிய குற்றம். ஆமாம், இது மிகப்பெரிய குற்றம் அப்படி எழுதி இருக்க கூடாது’’என்கிறார்.

எல்.முருகனை திரும்ப பெற வேண்டும் – குடியரசு தலைவருக்கு  கோரிக்கை

அவர் மேலும், ‘’எல். முருகன் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு ஆயிரம் முகாந்திரங்கள் இருக்கிறது. இதையெல்லாம் மத்திய உள்துறை அமைச்சர் ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் எனக்கு புரியவில்லை?’’ என்று கேள்வியை எழுப்புகிறார்.

எல்.முருகனை திரும்ப பெற வேண்டும் – குடியரசு தலைவருக்கு  கோரிக்கை

’’இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், குடியரசுத்தலைவர் அவர்களுக்கும் நான் வேண்டிக் கேட்டுக் கொள்வது ஒன்றுதான்… கொங்குநாடு என்று மத்திய இணை அமைச்சராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார் போட்டிருப்பது சட்டத்தையும் இந்திய இறையாண்மையையும் மீறிய செயல். அதனால் எல். முருகனை திரும்பப்பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’’ என பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் நாஞ்சில் சம்பத்.