இவர்கள் தீ வைத்துக் கொளுத்தினாலும் திருந்த மாட்டார்கள்..நாஞ்சில் சம்பத் விளாசல்

இவர்கள் தீ வைத்துக் கொளுத்தினாலும் திருந்த மாட்டார்கள்..நாஞ்சில் சம்பத் விளாசல்

தமிழக பாஜக தலைவராக எல். முருகன் நியமனம் செய்யப்பட்ட போது விமர்சனங்கள் எழுந்தன. சீனியர்கள் எத்தனையோ பேர் இருக்க முருகனுக்கு ஏன் தலைவர் பதவி என்று பலரும் விமர்சித்து வந்தனர். ஆனாலும் எல். முருகன் பாஜகவில் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நெடுங்காலம் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்திருந்ததால் விமர்சனங்கள் ஓரளவு குறைந்தன.

இவர்கள் தீ வைத்துக் கொளுத்தினாலும் திருந்த மாட்டார்கள்..நாஞ்சில் சம்பத் விளாசல்

முருகன் தற்போது மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டதால் அவர் வகித்து வந்த தமிழக பாஜக தலைவர் பதவியை துணைத் தலைவராக இருந்த அண்ணாமலைக்கு கொடுக்கப்பட்டிருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. கட்சியில் இணைந்து ஒரு வருடத்திற்குள் ஒருவருக்கு தலைவர் பதவியா? என்று பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இவர்கள் தீ வைத்துக் கொளுத்தினாலும் திருந்த மாட்டார்கள்..நாஞ்சில் சம்பத் விளாசல்

திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தும் இது குறித்து கடுமையாக பாஜகவை விளாசித் தள்ளி இருக்கிறார். அவர், ‘’அமித்ஷா போன்றவர்களின் கையில் அந்த கட்சி சிக்கி இருக்கிற காரணத்தினால் உழைப்பவன் நிராகரிக்கப்பட்டு ரத்தக்கண்ணீர் சிந்திக்கிறான்’’என்கிறார்.

இவர்கள் தீ வைத்துக் கொளுத்தினாலும் திருந்த மாட்டார்கள்..நாஞ்சில் சம்பத் விளாசல்

மேலும், ‘’ மோகன்ராஜ் போன்றவர்களெல்லாம் கட்சிக்காக நிறைய தியாகம் செய்திருக்கிறார்கள். காயம்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி உயிர் பிழைத்ததே புண்ணியம் என்று கருதுகிறது அவரது குடும்பம். ஆனால் அவருக்கு கட்சியிலும் சரி ஆட்சியிலும் சரி எந்த பொறுப்பும் இல்லை. அதேபோல்தான் அண்ணன் பொன். ராதாகிருஷ்ணனுக்கு கட்சியில் எந்த பொறுப்பும் இல்லை.

இவர்கள் தீ வைத்துக் கொளுத்தினாலும் திருந்த மாட்டார்கள்..நாஞ்சில் சம்பத் விளாசல்

கேரளாவில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறவில்லை. ஆனாலும் அங்கு இருக்கிற முரளிதரனுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்து இருக்கிறார்கள். வெற்றி பெறாத முரளிதரனுக்கு வாய்ப்பு கொடுத்த பாஜக ஏன் தமிழகத்தில் அண்ணன் பொன். ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை . உழைப்பவர்களை உதாசீனம் செய்வதும் விளம்பர பிரியர்களையும் தூக்கி உயர வைத்துக் கொண்டாடுவதுதான் பாஜகவின் குணம். இவர்கள் தீ வைத்துக் கொளுத்தினாலும் திருந்த மாட்டார்கள்’’ என்று கடுமையாக சாடியிருக்கிறார்.