’’ஆட்டுக்கு வால் அளவாய்த்தான் இருக்கும் சில இடங்களில் கூடுதலாக இருக்கும் போலிருக்கிறது’’

’’ஆட்டுக்கு வால் அளவாய்த்தான் இருக்கும் சில இடங்களில் கூடுதலாக இருக்கும் போலிருக்கிறது’’

தமிழக பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக திருச்சியில் அளித்த வரவேற்பு கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, ‘’நம்மை பற்றி பொய்யாக செய்தி போடுகிறார்களே என்று இந்த ஊடகங்களை பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம். அதை நீங்கள் மறந்துவிடுங்கள். முன்னாள் மாநிலத்தலைவர் முருகன் தான் இப்போது தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர். அனைத்து ஊடகங்களூம் அவருக்கு கீழ் வந்துவிடும். ஆறு மாதங்களுக்குள் ஊடகங்களை நாம் கையிலெடுத்து விடலாம். கட்டுப்படுத்திவிடலாம்’’ என்று சொன்னது பெரும் சர்ச்சை ஆனது. அண்ணாமலையின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

’’ஆட்டுக்கு வால் அளவாய்த்தான் இருக்கும் சில இடங்களில் கூடுதலாக இருக்கும் போலிருக்கிறது’’

இன்னும் ஆறே மாதங்களில் அனைத்து ஊடகங்களும் நம் வசம் என்ற அண்ணாமலை மிரட்டல், பாஜக மநுவாத பாசிச கட்சி என்பது நித்தம் நித்தம் நிரூபணம் ஆகிறது என்கிறார் மார்க்சிஸ்ட் அருணன்.

இன்னும் 6 மாதத்தில் தமிழக ஊடகங்கள் பெட்ரோல்,டீசல் 100 ரூபாய்க்கு விற்பதையும்,மோடி அரசால் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதையும், ரஃபேல் உட்பட வரலாறு காணாத ஊழல்களையும் ஆதரித்துப் பேச வேண்டும். இல்லாவிட்டால்? தமிழக அரசியலில் பாஜகவின் வெட்கமற்ற அராஜக அரசியலின் துவக்கம் என்று சாடியிருக்கும் ஜோதிமணி எம்.பி., தமிழக ஊடகங்கங்கள் பாரதியை உரக்கச் சொல்ல வேண்டிய நேரமிது.

’’ஆட்டுக்கு வால் அளவாய்த்தான் இருக்கும் சில இடங்களில் கூடுதலாக இருக்கும் போலிருக்கிறது’’

“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமெனதில்லையே” தமிழ்மண்ணில் பாஜகவின் அராஜக அரசியலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உறுதியோடு உங்கள் பக்கம் நிற்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

’’ஆட்டுக்கு வால் அளவாய்த்தான் இருக்கும் சில இடங்களில் கூடுதலாக இருக்கும் போலிருக்கிறது’’

அழிவுக்கே வழிவகுக்கும் ஆணவம். ஆட்டுக்கு வால் அளவாய்த்தான் இருக்கும் என்பார்கள். சில இடங்களில் கூடுதலாக இருக்கும் போலிருக்கிறது என்று கடுமையாக அண்ணாமலையை சாடுகிறார் சுப.வீரபாண்டியன்.

இந்நிலையில், தான் பாரம்பரிய ஊடகங்களை பற்றி எதுவும் சொல்லவில்லை என்றும், ஓடிடி, சமூக வலைத்தளங்கள் எனும் புதிய தொழில்நுட்ப விதிகள் குறித்துதான் பேசினேன் என்று அந்தர்பல்டி அடித்திருக்கிறார்.