பிள்ளையார்சுழி போட்ட முருகனே அந்தர்பல்டி- ஆனால், அர்ஜூத் சம்பத்…?

 

பிள்ளையார்சுழி போட்ட முருகனே அந்தர்பல்டி- ஆனால், அர்ஜூத் சம்பத்…?

தமிழக பாஜக தலைவராக இருந்த எல். முருகன் அண்மையில் மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார். அப்போது அவரது பயோடேட்டாவில் கொங்கு நாடு என்று இடம்பெற்றிருந்தது தான் பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்தது. தமிழ்நாட்டை இரண்டாக பிரித்து கொங்கு நாடு என்பதை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க முருகன் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் என்று பரபரப்பு எழுந்தது.

பிள்ளையார்சுழி போட்ட முருகனே அந்தர்பல்டி- ஆனால், அர்ஜூத் சம்பத்…?

இதையடுத்து பெரும் விவாதமே நடந்தது. பாஜகவினர் பலரும் கொங்குநாடு முழக்கத்தினை முன்னெடுத்தனர். கொங்குநாடு முழக்கத்திற்கு எதிராக பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டதாக சொல்லப்படும் முருகனே அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கொங்குநாடு என்று தனது பயோடேட்டாவில் இடம்பெற்றது தட்டச்சு பிழை என்று அந்தர் பல்டி அடித்திருக்கிறார்.

பிள்ளையார்சுழி போட்ட முருகனே அந்தர்பல்டி- ஆனால், அர்ஜூத் சம்பத்…?

பிள்ளையார் சுழி போட்டவரே இப்படி அந்தர்பல்டி அடித்த பிறகு, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தமிழ்நாட்டை மூன்றாக பிரிக்க வேண்டும் என்று மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் இருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்கள் அவரை சந்தித்தபோது, கொங்குநாடு விவகாரம் குறித்து கேட்டனர். அதற்கு அர்ஜுன் சம்பத் , கொங்குநாடு கோரிக்கை கடந்த 20 ஆண்டுகளாக வைக்கப்பட்டு வரும் கோரிக்கைதான். வளர்ச், சி முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்ட கோரிக்கைதான் இது. தமிழகத்தை மூன்றாகப் பிரித்து மூன்று மாநிலங்களாக ஆக்க வேண்டும். சிறிய மாநிலமாக இருந்தால் நிர்வாகம் செய்ய வசதியாக இருக்கும்’’ என்றார்.