’’பிடித்து வைத்த அழுக்கு பிள்ளையார்..உடன்பிறப்புகள் சொல்லும் சமூக நீதி இது தானோ? ’’

’’பிடித்து வைத்த அழுக்கு பிள்ளையார்..உடன்பிறப்புகள் சொல்லும் சமூக நீதி இது தானோ? ’’

பெருந்தலைவர் காமராஜரின் 119 வது பிறந்த நாள் விழா நேற்று மாநிலமெங்கும் கொண்டாடப்பட்டது. திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு. க. ஸ்டாலின் காமராஜர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

’’பிடித்து வைத்த அழுக்கு பிள்ளையார்..உடன்பிறப்புகள் சொல்லும் சமூக நீதி இது தானோ? ’’

காமராஜரின் பிறந்த தினத்தை முன்னிட்டு முதல்வர், ’’அவர் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட கர்மவீரர். அவர் படிக்காத மேதை. காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். பாரத ரத்னா காமராஜர் அவர்கள் வாழ்ந்த இல்லம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் நினைவு இல்லமாக மாற்றப்பட்டது.

’’பிடித்து வைத்த அழுக்கு பிள்ளையார்..உடன்பிறப்புகள் சொல்லும் சமூக நீதி இது தானோ? ’’

கன்னியாகுமரியில் அவரது மணிமண்டபத்தை திறந்து வைத்தது திமுக அரசு. கர்ம வீரரின் பிறந்த நாளில் அவரை பெருமையுடன் நினைவு கூறுவோம். கல்வியில் தன்னிகரற்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்திட உறுதியேற்போம்’’ என்று தெரிவித்திருந்தார்.

காமராஜரின் கல்வி பணியை திமுக தொடர்கிறது என்றும், மறைந்த காமராஜருக்கு திமுக செய்த திட்டங்கள் குறித்ம்து ஸ்டாலின் இவ்வாறு கூறியிருக்கும் நிலையில், காமராஜருக்கு எதிராக திமுக செயலபட்டதை சுட்டிகாட்டி இருக்கிறது பாஜக.

’’பிடித்து வைத்த அழுக்கு பிள்ளையார்..உடன்பிறப்புகள் சொல்லும் சமூக நீதி இது தானோ? ’’

அன்றைக்கு காமராஜரையும் அமைச்சர் கக்கனையும் கடுமையாக விமர்சித்து முரசொலியில் வெளிவந்த கார்ட்டூனை குறிப்பிட்டும், கர்மவீரரை நிறத்தை வைத்து திமுகவினர் கிண்டல் அடித்தது குறித்தும் தமிழக பாஜக பொருளாளர் எஸ். ஆர். சேகர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ’’கர்மவீரரை அண்டங்காக்கை என்று அவரது தோற்றத்தை ஈனத்தனமா கிண்டலடித்தவர்கள் திமுகவினர்’’ என்கிறார். மேலும், ’’எளிமை சிகரம் கக்கன் அவர்களை அமைச்சராக்கிய கர்மவீரரை விமர்சித்து முரசொலியில் வெளிவந்த கார்ட்டூன். உடன்பிறப்புகள் சொல்லும் சமூக நீதி இது தானோ?’’ என்று கேள்வியை எழுப்புகிறார்.