ம.நீ.ம. ஸ்ரீநிதி காங்கிரசில் இணைந்தார்

 

ம.நீ.ம. ஸ்ரீநிதி காங்கிரசில் இணைந்தார்

நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் நீதிமய்யம் கட்சி படு தோல்வியை சந்தித்தது. அக்கட்சியில் போட்டியிட்ட அத்தனை வேட்பாளர்களும் தோல்வி அடைந்தனர். கட்சியின் தலைவர் கமல்ஹாசனே தோல்வியுற்றார். ம.நீ.மய்யத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட கட்சிகளும் தோல்வியை சந்தித்தன.

ம.நீ.ம. ஸ்ரீநிதி காங்கிரசில் இணைந்தார்

தேர்தல் தோல்விக்கு பின்னர் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அக்கட்சியில் இருந்து வெளியேறிவிட்டனர். பல நிர்வாகிகள் திமுகவில் இணைந்துவிட்டனர்.

மதுரவாயல் சட்டமன்ற வேட்பாளராக களமிறங்கிய பத்மபிரியா மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துவிட்டார். இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் உடுமலைப்பேட்டை வேட்பாளர் ஸ்ரீநிதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் அகில இந்திய பொதுச்செயலாளர் தமிழக பொறுப்பாளர் தினேஷ்ராவ் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

ம.நீ.ம. ஸ்ரீநிதி காங்கிரசில் இணைந்தார்

இந்த நிகழ்வின் போது கே.வி.தங்கபாலு , ஜோதிமணி எம்.பியும் உடன் இருந்தனர். ஸ்ரீநிதி காங்கிரசில் இணைந்தது குறித்து ஜோதிமணி ‘’தலைவர் ராகுல்காந்தி அவர்களின்பால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில் இணைய ஏராளமான இளைஞர்களும் பெண்களும் தயாராக இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி உறுதியோடு களத்தில் நின்று மக்கள் விரோத மோடி அரசை வரும் தேர்தலில் வீழ்த்தும். மகிழ்ச்சி ஸ்ரீநிதி. இணைந்து பயணிப்போம்’’என்று தெரிவித்திருக்கிறார்.