ரஜினியின் மேற்கு வங்க பயணம் கடைசி நேரத்தில் ரத்து ஆனது ஏன்?

ரஜினியின் மேற்கு வங்க பயணம் கடைசி நேரத்தில்  ரத்து ஆனது ஏன்?

நடிகர் ரஜினிகாந்த் இன்று நான்கு நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்ல இருந்தார். இன்று பிற்பகலில் அவர் புறப்படுவதாக இருந்த நிலையில் திடீர் என்று அவரது பயணம் ரத்து ஆகியிருக்கிறது.

ரஜினியின் மேற்கு வங்க பயணம் கடைசி நேரத்தில்  ரத்து ஆனது ஏன்?

அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக சொல்லப்பட்ட நிலையில்தான் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று வந்தார். டப்பிங் பணிகள் மட்டுமே இன்னும் நிறைவடையவில்லை என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், இன்னும் நான்கு நாட்கள் நடித்தால் அதோடு ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகிவிடுமாம். இதற்காகத்தான் அவர் மேற்கு வங்கம் செல்கிறார்.

ரஜினியின் மேற்கு வங்க பயணம் கடைசி நேரத்தில்  ரத்து ஆனது ஏன்?

இதற்கிடையில், அரசியலுக்கு வருவதாக இருந்த ரஜினிகாந்த் தேர்தல் நேரத்தில் அரசியலுக்கு வரமாட்டேன் என்று அறிவித்தார். எதிர்காலத்திலாவது அவர் வருவாரா என்று கொஞ்சம் இருந்த எதிர்ப்பார்பினையும் உடைக்கும்படியாக கடந்த 12ம் தேதி அன்று எதிர்காலத்திலும் அரசியலுக்கு வரமாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிட்டார். ரஜினி மக்கள் மன்றத்தையே கலைத்துவிட்டார்.

ரஜினியின் மேற்கு வங்க பயணம் கடைசி நேரத்தில்  ரத்து ஆனது ஏன்?

இந்த நிலையில் அவர் இன்று மேற்கு வங்கம் சென்று அங்கே நான்கு நாட்கள் தங்கி இருந்து அண்ணாத்த படத்தின் 10 சதகிவிகித இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருந்தார்.

மேற்கு வங்கத்தில் கொல்கத்தா அருகே அந்த படப்பிடிப்பு நடைபெறுவதாக இருந்தது. ரஜினியின் மேற்கு வங்க பயணம் ரத்து ஆனதால், சென்னையில் மற்ற நடிகர்களை வைத்து எடுக்க வேண்டிய மற்ற காட்சிகளை எடுக்க தயாராகி வருகின்றனர் படக்குழுவினர்.

ரஜினியின் மேற்கு வங்க பயணம் கடைசி நேரத்தில்  ரத்து ஆனது ஏன்?

ரஜினியின் மேற்கு வங்க பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து படக்குழுவினர் எதுவும் தகவல் வெளியிடவில்லை. அதே நேரம், மீண்டும் மேற்கு வங்க பயணம் எப்போது என்பது குறித்தும் படக்குழுவினர் இன்னமும் முடிவு செய்யவில்லை.