கழுத்தை அறுத்தும் மனைவி மீது ஆத்திரம் தீராததால் பலமுறை கத்தியால் குத்திக்கொண்டே இருந்த கணவன்

 

கழுத்தை அறுத்தும் மனைவி மீது ஆத்திரம் தீராததால் பலமுறை கத்தியால் குத்திக்கொண்டே இருந்த கணவன்

மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அவர் மீது ஆத்திரம் கொண்டு கத்தியால் கழுத்தை அறுத்து இருக்கிறார். அப்படி இருந்தும் மனைவி மீதான ஆத்திரம் தீராததால் பலமுறை கத்தியால் மனைவியின் சடலத்தை குத்திக் கொண்டே இருந்திருக்கிறார். இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியிருப்பது சென்னை கிண்டியில்.

கழுத்தை அறுத்தும் மனைவி மீது ஆத்திரம் தீராததால் பலமுறை கத்தியால் குத்திக்கொண்டே இருந்த கணவன்

கிண்டி லேபர் காலனி லயன்ஸ் ஸ்கூல் சாலையைச் சேர்ந்தவர் நித்தியானந்தன்(32). லோடுமேன் டிரைவரான நித்தியானந்தன், கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் தனது நண்பரின் தங்கையான புவனேஸ்வரியை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

திருமணத்திற்கு பின்னர் தனது மனைவி புவனேஸ்வரி அடிக்கடி அக்காவின் கணவருடன் செல்போனில் பேசி வந்ததை வெறுப்பாக பார்த்து வந்திருக்கிறார் நித்தியானந்தன். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது நித்தியானந்தன் இத்தனை சொல்லி கண்டித்தும் கூட புவனேஸ்வரி அடிக்கடி அக்காவின் கணவருடன் செல்போனில் பேசுவதை நிறுத்தவில்லையாம்.

கழுத்தை அறுத்தும் மனைவி மீது ஆத்திரம் தீராததால் பலமுறை கத்தியால் குத்திக்கொண்டே இருந்த கணவன்

எத்தனை சொல்லியும் கேட்காமல் அக்காவின் கணவருடன் பேசி வருவதால் மனைவியின் நடத்தை மீது நித்தியானந்தத்திற்கு சந்தேகம் எழுந்திருக்கிறது. இதனால் கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்து கொன்று விட்டார். மனைவியின் கழுத்தை அறுத்து விட்ட பின்னரும் அவருக்கு மனைவி மீது இருந்த ஆத்திரம் போகவில்லை. கத்தியால் பலமுறை மனைவியின் உடலில் கத்தியால் குத்தி இருக்கிறார்.

அதன் பின்னர் தனது நண்பருக்கு(புவனேஷ்வரியின் சகோதரர்) போன் செய்து, ’ உன் தங்கச்சியை கொன்று விட்டேன்’ என்று சொல்லிவிட்டு நேராக கிண்டி போலீசுக்கு சென்று சரணடைந்துவிட்டார் நித்தியானந்தம்.

புவனேஸ்வரியின் அண்ணனும் நித்தியானந்தனும் நீண்டநாள் பழகி வந்த நண்பர்கள். அப்படி பழகி வந்த பழக்கத்தில்தான், உன் தங்கையை எனக்கு கட்டி கொடு என்று நித்தியானந்தன் கேட்டதால் நண்பர் தானே என்று மனமுவந்து அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். அப்படியிருந்தும் சந்தேகத்தால் தன் தங்கையை இப்படி கொலை செய்து விட்டானே என்று கதறி துடிக்கிறார் புவனேஸ்வரியின் சகோதரர்.