கொங்குநாடு என்பது பாஜகவின் கருத்தா? ஊடகங்களில் வெளியான செய்தியா?

 

கொங்குநாடு என்பது பாஜகவின் கருத்தா? ஊடகங்களில் வெளியான செய்தியா?

மிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் எல்.முருகன் மத்திய இணையமைச்சராக பதவியேற்றபோது வெளியிடப்பட்ட அவரது பயோ-டேட்டாவில் ‘கொங்குநாடு’ என்று குறிப்பிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், ‘கொங்கு நாடு’க்கு ஆதரவு தெரிவித்து மேலும் பரபரப்பை கூட்டினார். இதன்பின்னர் தினமலர் நாளிதழ், தமிழ்நாடு இரண்டாக பிரிகிறது – உருவாகிறது கொங்குநாடு என்று தலைப்பு கட்டுரை வெளிட்டது.

கொங்குநாடு என்பது பாஜகவின் கருத்தா? ஊடகங்களில் வெளியான செய்தியா?

இதனால் கொங்குநாடுக்கு ஆதரவாக, #கொங்குநாடு என்ற ஹேஷ்டேக் டுவிடட்ரில் ட்ரெண்டிங் ஆனது. இதன்பின்னர் ‘கொங்கு நாடு’ சர்ச்சை ஆனது. ‘கொங்கு நாடு’ என்ற பெயரில் தமிழ்நாட்டை பிளவுபடுத்த திட்டமிட்டிருப்பதாக வெளியாகி வரும் செய்திகள் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் கண்டனத்தை தெரிவித்திருந்தார். தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, அமமுக டிடிவி தினகரன், கனிமொழி எம்.பி., ஜோதிமணி எம்.பி., தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், திமுக செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ்.பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டை பிளவுபடுத்த பாஜகவின் திட்டம்தான் கொங்குநாடு அஸ்திரம் என்று கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

கொங்குநாடு என்பது பாஜகவின் கருத்தா? ஊடகங்களில் வெளியான செய்தியா?

பாஜக பிரமுகரும், நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் இந்த விவகாரம் குறித்து அளித்துள்ள பதிலில், ‘’நம்ம ஊரு பக்கத்தில் வல்லநாடு இருக்கிறது. தேனிக்கு பக்கத்தில் வருஷநாடு இருக்கிறது. அதையெல்லாம் மாநிலமாக பிரிக்கலாமா? எதற்கு அவங்களுக்கு பயம், பயமே தேவையில்லை. எல்லாம் தமிழ்நாடு தான்’’ தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பிரிக்கப்படபோகிறது என்று பலரும் பதறி துடித்துக்கொண்டிருக்கும் போது, பயப்பட தேவையில்லை என்று நயினார் நாகேந்திரன் சொல்லி இருக்கிறார்.

கொங்குநாடு என்பது பாஜகவின் கருத்தா? ஊடகங்களில் வெளியான செய்தியா?

அதே நேரம், ’’ஆந்திரா இரண்டாக பிரிந்து இருக்கிறது. உத்தரபிரதேசம் இரண்டாக பிரிந்து இருக்கிறது. மாநிலங்கள் இரண்டாக பிரிப்பது மாநில மக்களின் எதிர்பார்ப்பையும் நோக்கத்தையும் உணர்த்துகின்றது. மாநிலம் பிரிய வேண்டும் என்று மக்களுடைய எதிர்பார்ப்பு இருக்கும் என்றால் அதை செய்ய வேண்டியது அரசின் கடமை” என்றும் அவர் தெரிவித்துள்ளது, மக்கள் கேட்டால் மாநிலத்தை பிரிக்க வேண்டும் என்றே அவரது எண்ணத்தை காட்டுகிறது.

கொங்குநாடு என்பது பாஜகவின் கருத்தா? ஊடகங்களில் வெளியான செய்தியா?

’’கொங்குநாடு என்ற சொல் கேட்டு யாரும் மிரள வேண்டாம். கொங்குநாடு என்ற சொல்லில் சுவை உள்ளது. பயன்படுத்துகிறோம் – பயன்படுத்துவோம் – பயன்படுத்திக்கொண்டே இருப்போம்.’’என்கிறார் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.

கொங்குநாடு என்பது பாஜகவின் கருத்தா? ஊடகங்களில் வெளியான செய்தியா?

தமிழக பாஜகவின் மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் செய்தியாளர்களுக்கு அளித்த பதிலில், ‘’கொங்குநாடு என்பது பாஜகவின் கருத்து அல்ல. ஊடகங்களில் வெளியான செய்தியே தவிர பாஜகவின் கருத்து அல்ல’’ என்று சொல்லியிருக்கிறார். அவர் அத்தோடு நிறுத்தாமல், ‘’ இது குறித்து உயர் மட்டக் குழு முடிவு எடுக்கும்’’ என்று சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார்.