அரை நிர்வாணக் கோலம்.. வீடியோ கால் வில்லங்கம்.. சிக்கியது ராஜஸ்தான் கும்பல்

 

அரை நிர்வாணக் கோலம்.. வீடியோ கால் வில்லங்கம்.. சிக்கியது ராஜஸ்தான் கும்பல்

45 வயது வயதுடைய அந்தப் பெண் முகநூல் பக்கத்தில் ஆர்வம் செலுத்தி வந்திருக்கிறார். அப்போது பெண் ஒருவர் நட்பு அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு அவர் உடனே ஓகே சொல்லியிருக்கிறார். பின்னர் அந்த நபர் மெசேஜ் அனுப்ப பதிலுக்கு அந்தப் பெண்ணும் பேஸ்புக் மூலமாக மெசேஜ் அனுப்பி வந்துள்ளார்.

அரை நிர்வாணக் கோலம்.. வீடியோ கால் வில்லங்கம்.. சிக்கியது ராஜஸ்தான் கும்பல்

இப்படியே சென்று கொண்டிருந்த போது ஒரு கட்டத்தில் அந்த நபர் பெண்ணல்ல ஒரு ஆண் என்பது அந்தப் பெண்ணுக்கு தெரிய வந்தது. முதலில் அதிர்ச்சியான அவர் அப்புறமாக அந்த ஆணிடமும் சகஜமாக மெசேஜில் பேசி வந்துள்ளார். இந்த பழக்கம் நீடித்த நிலையில் ஒருநாள் தனது வாட்ஸ்அப் எண்ணை அவருக்கு பகிர்ந்திருக்கிறார்.

இதை அடுத்து வாட்ஸ்அப் காலில் இருவரும் நெடுநேரம் பேசி வந்திருக்கிறார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக தெரிவித்து பேசி வந்ததால் திடீரென ஒருநாள் அந்த ஆண் வீடியோ காலில் வந்திருக்கிறார். வீடியோ காலினை ஆன் செய்த பெண் அதிர்ச்சியாகி இருக்கிறார். அந்த ஆண் அரை நிர்வாண கோலத்தில் இருந்திருக்கிறார். அதனால் அந்த பெண் வெட்கத்துடன் பேசியிருக்கிறார். இதுதான் தருணம் என்று அந்தப் பெண்ணையும் அரை நிர்வாணத்தில் நின்று பேசும்படி சொல்லியிருக்கிறார்.

காதல் மயக்கத்தில் இருந்த அவர் அப்படியே செய்திருக்கிறார். வீடியோ காலில் பேசிவிட்டு அவர் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது ஒரு மெசேஜ் வந்து இருக்கிறது. மொபைலை எடுத்து அந்த மெசேஜை கிளிக் செய்தபோது தனது அரை நிர்வாண புகைப்படங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ந்து போயுள்ளார். அடுத்ததாக அவருக்கு போன் வந்திருக்கிறது. எடுத்து பேசியபோது எதிர்முனையில் இருந்தவர்கள் உடனே நாங்கள் சொல்லும் அக்கவுண்டுக்கு 15 ஆயிரத்தை அனுப்ப வேண்டும். இல்லை என்றால் உனது ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

அரை நிர்வாணக் கோலம்.. வீடியோ கால் வில்லங்கம்.. சிக்கியது ராஜஸ்தான் கும்பல்

இதனால் பயந்து போன அப்பெண் அவர்கள் சொன்ன வங்கி கணக்கிற்கு 15,000 ரூபாயை அனுப்பி வைத்துள்ளார். அத்தோடு பிரச்சினை முடிந்தது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் மறுபடியும் அவர்கள் போன் செய்து உடனே பத்தாயிரம் ரூபாய் அனுப்ப வேண்டும். இல்லையென்றால் உன் போட்டோக்கள் உலகம் முழுக்க பரவிவிடும் என்று சொல்லி மிரட்டி இருக்கிறார்கள்.

இப்போது பத்தாயிரம் கொடுத்தாலும் மீண்டும் மீண்டும் கேட்டு டார்ச்சர் செய்வார்கள் என்பதை புரிந்து கொண்ட பெண், வேறு வழியில்லாமல் மானம் போனால் பரவாயில்லை என்று நினைத்து துணிந்து மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அவர்கள் அந்த செல்போன் எண்ணை வைத்து தொடர்பு கொண்டதில் ராஜஸ்தானைச் சேர்ந்த 3 பேர் சிக்கினர். அவர்கள் போலி முகநூல் கணக்கை துவக்கி இப்படி மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.