கொங்குநாடு கனவு ஒரு நாளும் நிறைவேறாது – கனிமொழி ஆவேசம்

 

கொங்குநாடு கனவு ஒரு நாளும் நிறைவேறாது – கனிமொழி ஆவேசம்

தமிழகத்தை இரண்டாக பிரித்து கொங்கு மண்டலத்தை கொங்கு நாடு என்று தனி யூனியன் பிரதேசமாக பிரிக்க பாஜக முயன்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து தமிழகத்தை இரண்டாக பிரிப்பதற்கு எதிர்ப்பும் ஆதரவும் வலுத்தும் நிலையில், கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கனிமொழி எம்.பி. இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

கொங்குநாடு கனவு ஒரு நாளும் நிறைவேறாது – கனிமொழி ஆவேசம்

அதற்கு கனிமொழி, ’’தன் இன்னுயிர்களை தந்து இந்த மண்ணையும் மண்ணின் பெருமைகளையும் பாதுகாத்த சுதந்திர போராட்ட வீரர்களின் பெருமைகளை முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தொடர்ந்து காப்பாற்றி வரும்’’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கொங்குநாடு கனவு ஒரு நாளும் நிறைவேறாது – கனிமொழி ஆவேசம்

அவர் மேலும், ‘’ தமிழ் மண்ணின் பெருமைகளை எந்த காலகட்டத்திலும் திமுக ஆட்சி விட்டு கொடுத்து விடாது. தமிழின் பெருமைகளுக்காகவும் உரிமைகளுக்காகவும் திமுக ஆட்சி தொடர்ந்து போராடும்’’ என்று உறுதியளித்தவர், ‘’ தமிழகத்தை யாரும் பிரிக்க முடியாது. அந்த கனவு ஒரு நாளும் நிறைவேறாது. அதனால் யாரும் அது குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. தமிழகம் பாதுகாப்பான ஆட்சியில் இருக்கிறது. அதனால் தமிழகத்தைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை’’என்றார்.

கொங்குநாடு கனவு ஒரு நாளும் நிறைவேறாது – கனிமொழி ஆவேசம்

மத்திய அரசினை திமுக ஒன்றிய அரசு என்று சொல்லி வருவதால்தான் பதிலடி கொடுப்பதற்காக கொங்குநாடு பிரச்சனையை பாஜக கையில் எடுத்திருக்கிறதா? என்ர கேள்விக்கு, ’’அரசியல் சட்டத்தில் மத்திய அரசினை ஒன்றிய அரசு என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனால்தான் ஒன்றிய அரசு என்று கூறி வருகிறோம். ஒன்றிய அரசு என்று கூறி வருவதால் நாட்டுக்கு எதிரான ஒரு காரியமாக பார்க்கக்கூடாது. ’’என்றார்.