மூன்றாக பிரிகிறது தமிழ்நாடு -முதலில் உருவாகிறது ‘கொங்குநாடு’: ஈஸ்வரனால் முருகன் போட்ட பிள்ளையார் சுழி

 

மூன்றாக பிரிகிறது தமிழ்நாடு -முதலில் உருவாகிறது ‘கொங்குநாடு’: ஈஸ்வரனால் முருகன் போட்ட பிள்ளையார் சுழி

கொங்குநாடு என்று தமிழ்நாடு பிரிவதற்கு முருகன் பிள்ளையார் சுழி போட்டுவிட்டார். இதையடுத்து #KonguNadu என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. பாஜக எடுத்த இந்த அஸ்திரத்தால் கொஞ்சமும் இதை எதிர்பார்த்திராத திமுக திக்கு முக்காடிப் போயிருக்கிறது.

மூன்றாக பிரிகிறது தமிழ்நாடு -முதலில் உருவாகிறது ‘கொங்குநாடு’: ஈஸ்வரனால் முருகன் போட்ட பிள்ளையார் சுழி

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்லி வருகிறது. பாஜகவினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தபோதும் ஒன்றிய அரசு தான் சரியான சொல். ஒன்றிய அரசு என்று சொல்வதுதான் சரியானது. அதனால் இனிமேல் நாங்கள் ஒன்றிய அரசு என்றுதான் சொல்வோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியாக தெரிவித்தார்.

மூன்றாக பிரிகிறது தமிழ்நாடு -முதலில் உருவாகிறது ‘கொங்குநாடு’: ஈஸ்வரனால் முருகன் போட்ட பிள்ளையார் சுழி

சட்டப்பேரவையில் நிகழ்ந்த ஆளுநர் உரையிலும் கூட ஒன்றிய அரசு என்ற சொல் தான் இடம்பெற்றது. சட்டப்பேரவையின் குறிப்புகளிலும் கூட ஒன்றிய அரசு என்றுதான் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் ஐ. லியோனி இனி பாடப்புத்தகங்களில் மத்திய அரசு என்ற சொல் மாற்றப்பட்டு ஒன்றிய அரசு என்ற சொல்லே இடம் பெறும் என்று அறிவித்திருக்கிறார்.

மூன்றாக பிரிகிறது தமிழ்நாடு -முதலில் உருவாகிறது ‘கொங்குநாடு’: ஈஸ்வரனால் முருகன் போட்ட பிள்ளையார் சுழி

ஒன்றிய அரசு விவகாரம் முடிந்து விடும் என்று நினைத்திருந்த பாஜக, திமுகவினர் பாடப்புத்தகம் வரைக்கும் கொண்டு வந்துவிட்டதால் இனிமேலும் விடக்கூடாது திமுகவிற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர். அதனால் தமிழ்நாட்டை இரண்டாக பிரித்து கொங்கு நாடு என்று தனியாக உருவாக்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுக படுதோல்வியை கண்டது. அதனால் அம்மண்டலத்தை வலுப்படுத்தவே ம.நீ.ம. மகேந்திரனை திமுகவுக்கு தூக்கி வந்திருப்பதாக தகவல். திமுக முயற்சி இப்படி இருக்க, கொங்கு மண்டலத்தினை மேலும் வலுப்படுத்தவே அண்ணாமலைக்கு மாநில தலைவர் பதவி, முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி. வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. இது போதாது என்று இன்னும் பலப்படுத்தவே ‘கொங்குநாடு’அஸ்திரம் எடுத்திருக்கிறது பாஜக.

ஈஸ்வரனால் உருவாகும் கொங்குநாடு

மக்கள் தொகையை கணக்கில் கொண்டும் நிர்வாக வசதிக்காகவும் தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த 25 ஆண்டு காலமாக தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

மூன்றாக பிரிகிறது தமிழ்நாடு -முதலில் உருவாகிறது ‘கொங்குநாடு’: ஈஸ்வரனால் முருகன் போட்ட பிள்ளையார் சுழி

மதுரையை தலைமையாகக் கொண்டு தமிழ் நாட்டை பிரிக்க வேண்டும் என்றும், திருச்சியை தலைமையாகக் கொண்டு தமிழ் நாட்டை பிரிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் இருந்துவரும் நிலையில் கொங்கு மண்டலத்தை மையமாகக் கொண்டு தமிழ்நாடு பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது ஏன் என்பதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

சட்டமன்றத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஈஸ்வரன் , ’ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தையை களங்கப்படுத்தி பேசினார். அவர் பேசியபோது முதல்வர் உள்ளிட்ட யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஒன்றிய விவகாரத்தில் கடுப்பாகி கிடந்த பாஜக இதில் கொதிந்தெழுந்தது. ஈஸ்வரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதனால் கொங்குநாடு என்று தமிழகத்தை இரண்டாக பிரித்து விடலாம் என்று பாஜக முடிவெடுத்துள்ளதாக தகவல்.

மூன்றாக பிரிகிறது தமிழ்நாடு -முதலில் உருவாகிறது ‘கொங்குநாடு’: ஈஸ்வரனால் முருகன் போட்ட பிள்ளையார் சுழி

மேலும் கொங்கு மண்டலத்தில் பாஜகவுக்கு தனி செல்வாக்கு இருக்கின்றது. பாஜகவுக்கு அங்கே ஓட்டு வங்கி இருக்கின்றது என்பதை அறிந்து கொண்டதாலும் கொங்குவை தனியாக பிரித்துவிட அதாவது புதுச்சேரியை போல் தனி யூனியன் பிரதேசமாக பிரித்துவிட பாஜக முயன்று வருவதாக தகவல். இதை உறுதிப்படுத்தும் விதமாக மத்திய இணை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள முருகன் பயோடேட்டாவில் அவரது ஊர் என்ற இடத்தில் கொங்குநாடு இன்று இடம்பெற்றுள்ளது.

கொங்குநாடு விவகாரத்தினை எல்.முருகன் உறுதி படுத்துகிறார் என்றாலும், பாமக நிறுவனர் ராமதாசின் வலியுறுத்தலின் பேரில் அவர்தான் இந்த கொங்குநாடு முயற்சிக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் என்கிறார்கள். கொங்குநாடு என்று பயோடேட்டாவில் முருகன் எழுதிக்கொடுத்ததால்தான் மத்திய அரசும் அதை அப்படியே சேர்த்திருக்கிறது என்றும் தகவல்.

மூன்றாக பிரிகிறது தமிழ்நாடு -முதலில் உருவாகிறது ‘கொங்குநாடு’: ஈஸ்வரனால் முருகன் போட்ட பிள்ளையார் சுழி

கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்:

பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசனும் கொங்கு மண்டலம் குறித்த ஒரு முக்கிய பதிவினை வெளியிட்டிருக்கிறார்

மூன்றாக பிரிகிறது தமிழ்நாடு -முதலில் உருவாகிறது ‘கொங்குநாடு’: ஈஸ்வரனால் முருகன் போட்ட பிள்ளையார் சுழி

அதில், ’’கொங்கு தேர் வாழ்க்கை என்று இறையனாரின் சங்கப்பாடல் காலம் முதல் கொங்கு நாடு என்ற வரையறை உண்டு. அண்ட நாடு, அரையன் நாடு, ஆறைநாடு, ஆனைமலை நாடு, ராசிபுர நாடு, ஒருவங்க நாடு,காங்கேயம் நாடு, காஞ்சிக்கோயில் நாடு, காவடிக்கன் நாடு, கிழங்கு நாடு, குறும்பு நாடு, தட்டையன் நாடு, தலையன் நாடு, திருவாவினன் குடி நாடு, தென்கரை நாடு, நல்லுருக்கன் நாடு, பூந்துறை நாடு, பூவாணிய நாடு, பொன்களூர் நாடு, மணல் நாடு, வடகரை நாடு, வாரக்கண் நாடு, வாழவந்தி நாடு, வெங்கால நாடு என்று 24 நாடுகள் உள்ளடக்கிய கொங்கு நாடு என்று கொங்கு மண்டல சதகங்களில் குறிப்பு இருக்கிறது.

மூன்றாக பிரிகிறது தமிழ்நாடு -முதலில் உருவாகிறது ‘கொங்குநாடு’: ஈஸ்வரனால் முருகன் போட்ட பிள்ளையார் சுழி

ஆகெழு கொங்கர் என்று பதிற்றுப்பத்திலும், கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே என்று புற நானூற்றிலும் கொங்கு தேசம் பற்றிய விரிவான சித்திரம் தமிழ் சங்ககால இலக்கியம் முழுக்க பரந்து இருக்கிறது. நாயக்கர்களின் காலத்திலும் கொங்கு பாளையப்பட்டுக்கள் என்று கொங்கு பகுதிக்கான வரி நடைமுறைகள் பிற பகுதிகளை விட தனியாகத்தான் இருந்திருக்கிறது. கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்ற பொருளில் மூதுரையிலும் சொல்லப்பட்டிருக்கிறது.’’என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மூன்றாக பிரிய வலுக்கும் கோரிக்கை:

’கொங்குநாடு’ என தமிழ்நாடு இரண்டாகப் பிரிகிறது என்று இன்றைய தினமலர் நாளிதழில் தலைப்பு கட்டுரையாக வெளிவந்திருக்கிறது. இதையடுத்து கொங்குநாடு என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது. இது ஒருபுறமிருக்க தமிழகத்தை இரண்டாக பிரிப்பது மட்டும் போதாது மூன்றாக பிரிக்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதாவது கொங்குநாடு என்பதை போல வடதமிழ்நாடு, தென்தமிழ்நாடு என்றும் பிரிக்க வேண்டும் எனவும், ’ஒரு’ மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டை ’மூன்று’ மாநிலமாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து இருக்கிறது.

மூன்றாக பிரிகிறது தமிழ்நாடு -முதலில் உருவாகிறது ‘கொங்குநாடு’: ஈஸ்வரனால் முருகன் போட்ட பிள்ளையார் சுழி

அதாவது சென்னையை தலைநகராக கொண்டு அமையும் மாநிலத்திற்கு வடதமிழ்நாடு என்றும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,திருவள்ளூர், விழுப்புரம் ,கடலூர், அரியலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ,பெரம்பலூர் ஆகிய 11 மாவட்டங்களை இதில் சேர்த்து விடலாம் என்று,, சேலம், ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், நாமக்கல் ,திண்டுக்கல் ,தர்மபுரி, கரூர் ,கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களை இணைத்து கொங்கு நாடு மாநிலத்தில் சேர்த்து விடலாம் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. மதுரை, திருச்சி ,புதுக்கோட்டை ,தஞ்சாவூர் ,திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விருதுநகர், தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 15 மாவட்டங்களை உள்ளடக்கிய ஒரு மாநிலம் அதாவது தென் தமிழ்நாடு உருவாக வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

மூன்றாக பிரிகிறது தமிழ்நாடு -முதலில் உருவாகிறது ‘கொங்குநாடு’: ஈஸ்வரனால் முருகன் போட்ட பிள்ளையார் சுழி

இந்தியாவில் தற்போது 28 மாநிலங்கள் உள்ளன. பிள்ளைகள் வளர்ந்து திருமணம் செய்த பின்னர் தங்களின் வசதிக்காக தனிக்குடித்தனம் போவதில்லையா? அப்படித்தான் மாநிலங்கள் பிரிவதும் என்று தமிழ்நாடு பிரிவதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டை மூன்றாக பிரித்தால்தான் பல்வேறு வசதிகள் கிடைக்கும். இதனால் நஷ்டம் எதுவும் இல்லை . லாபம் தான் ஏற்படுமே தவிர நஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்று பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.