கணவனை ஏமாற்ற காதலனுடன் போட்ட திட்டம்: கடைசியில் அவரே தூக்கில் தொங்கினார்

 

கணவனை ஏமாற்ற காதலனுடன் போட்ட திட்டம்: கடைசியில் அவரே தூக்கில் தொங்கினார்

கோவை மாவட்டம் சோமனூரில் வசித்து வருபவர் சீனிவாசன். இவரது மனைவி கங்காதேவி. பியூட்டி பார்லர் நடத்திவந்த கங்காதேவி முகநூலில் எந்நேரமும் ஆக்டிவாக இருந்துள்ளார். இதனால் மதுரையைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது.

கணவனை ஏமாற்ற காதலனுடன் போட்ட திட்டம்: கடைசியில் அவரே தூக்கில் தொங்கினார்

மதுரை காமராஜர் நகரில் இருந்து அடிக்கடி சோமனூர் வந்து கங்காதேவியின் பியூட்டி பார்லர் இருவரும் தனிமையில் இருந்திருக்கிறார்கள். இப்படி திருட்டுத்தனமாக வாழ்வதைவிட எங்காவது சென்று தனியாக வீடு எடுத்து நிம்மதியாக வாழலாம் என்று கங்காதேவியும் முத்துப்பாண்டியும் முடிவெடுத்திருக்கிறார்கள். அதற்கு முதலில் பணம் வேண்டும் அடுத்ததாக கணவன் சீனிவாசனை சமாளித்து விட்டுத் தான் போட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் கங்காதேவி.

இதை அடுத்து காதலனுடன் சேர்ந்து கொள்ளை நாடகம் நடத்தியிருக்கிறார் கங்காதேவி. திட்டத்தின்படி முத்துப்பாண்டி கங்காதேவியின் கை, கால்களை கட்டிப் போட்டுவிட்டு அவரின் காது, மூக்கு, கை, கழுத்தில் இருந்த நகைகளை கழற்றி எடுத்துக் கொண்டு போய்விட்டார்.

கணவனை ஏமாற்ற காதலனுடன் போட்ட திட்டம்: கடைசியில் அவரே தூக்கில் தொங்கினார்

வீடு திரும்ப வேண்டிய கங்காதேவி இன்னமும் வரவில்லை என்று பியூட்டி பார்லருக்கு தேடிக்கொண்டபோன சீனிவாசன் அதிர்ந்தார். அங்கே கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த மனைவியைப்பார்த்து கட்டுகளை அவிழ்த்து விட்டார். நான்கைந்து பேர் வந்து தன்னைக் கட்டிப் போட்டுவிட்டு நகைகளை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டதாக கங்காதேவி கணவன் சீனிவாசனிடம் கூறியிருக்கிறார்.

19 பவுன் கொள்ளை போனதால் அருகிலிருந்த கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளனர். புகார் அளித்து விட்டு வீட்டிற்கு வந்துவிட்டார். போலீசார் கொள்ளைச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

இதற்கிடையில் கங்காதேவி முத்துப்பாண்டிக்கு போன் செய்து போலீஸ் எப்படியும் உன்னை பிடித்து விட்டால் என்னை காட்டிக் கொடுத்து விடாதே என்று கெஞ்சி இருக்கிறார். அவரும் அதற்கு சரி என்று சொல்லியிருக்கிறார். அப்படியிருந்தும் கங்காதேவிக்கு ஒரு மன உளைச்சல். முத்துப்பாண்டி பிடிபட்டு விட்டால் கொள்ளை நாடகம் அம்பலம் ஆகிவிட்டால், தனக்கும் முத்துப்பாண்டிக்கு, இருக்கும் கள்ளக்காதல் வெளியே தெரிந்துவிடுமோ என்ற கலக்கத்தில் இருந்துள்ளார்.

இதனால் அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டு விட்டார். போலீசார் கங்காதேவியின் தற்கொலை அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் அவர் மேல் சந்தேகம் கொண்டு அவரது செல்போனை எடுத்து ஆய்வு செய்தனர். அதில் உள்ள தொலைபேசி எண்களை வைத்து விசாரணையில் இறங்கிய போது முத்துப்பாண்டி சிக்கினார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் முத்துப்பாண்டிக்கும், கங்காதேவிக்கும், இருந்த உறவு தெரியவந்து பேரதிர்ச்சிக்கு ஆளானார் சீனிவாசன்.