வில்லேஜ் குக்கிங் குழுவுக்கு டைமண்ட் பட்டன் வழங்கி கவுரவித்த யூடியூப்

வில்லேஜ் குக்கிங் குழுவுக்கு டைமண்ட் பட்டன் வழங்கி கவுரவித்த யூடியூப்

ஒரு கோடி சப்ஸ்க்ரைபர்களை தொட்டுவிட்டதால் ‘வில்லேஜ் குக்கிங்’சேனலுக்கு டைமண்ட் பட்டன் வழங்கி கவுரவித்திருக்கிறது யூடியூப் நிறுவனம்.

வில்லேஜ் குக்கிங் குழுவுக்கு டைமண்ட் பட்டன் வழங்கி கவுரவித்த யூடியூப்

புதுக்கோட்டை மாவட்டம் சின்னவீரமங்கலம் கிராமத்தை சேர்ந்த 6 பேர் கடந்த 2018ம் ஆண்டு வில்லேஜ் குக்கிங் என்ற சேனலை தொடங்கினர். இவர்கள் 6 பேருமே உறவுக்காரர்கள். மிகுந்த போராட்டத்திற்கு பின்னர் ஒரு லட்சம் சப்ஸ்க்ரைபர்கள் வந்ததும் வெண்கல பட்டன் வழங்கி கவுரவித்தது யூடியூப் நிறுவனம்.

சேனலுக்கு 10 லட்சம் சப்ஸ்க்ரைபர்கள் வந்ததும் கோல்ட் பட்டன் வழங்கி கவுரவித்தது யூடியூப். தற்போது மூன்று ஆண்டுகளில் ஒரு கோடி சப்ஸ்க்ரைபர்களை தொட்டுவிட்டதால் ஒரு கோடி சப்ஸ்க்ரைபர்களை தொட்ட முதல் தமிழ் யூடியூப் சேனல் என்ற பெருமை கிடைத்திருக்கிறது.

வில்லேஜ் குக்கிங் குழுவுக்கு டைமண்ட் பட்டன் வழங்கி கவுரவித்த யூடியூப்

ஒரு கோடி சப்ஸ்க்ரைபர்களை தொட்டதால் டைமண்ட் பட்டன் அனுப்பி வைத்து கவுரவித்திருக்கிறது யூடியூப்.

கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது ராகுல்காந்தி இந்த வில்லேஜ் குக்கிங் குழுவினருடன் அமர்ந்து மஸ்ரூம் பிரியாணி செய்வதை பார்த்தார். அந்த மஸ்ரூம் பிரியாணிக்கு தேவையான வெங்காய பச்சடியை ராகுல்காந்தியே செய்தார். இந்த நிகழ்ச்சி மூலம் உலக முழுவதும் வில்லேக் குக்கிங் குழுவினர் புகழ்பெற்றனர். இதனால் 70 லட்சத்தில் இருந்த சப்ஸ்க்ரைபர்கள் சர்ரேலென்று ஒரு கோடிக்கு எட்டியது.

வில்லேஜ் குக்கிங் குழுவுக்கு டைமண்ட் பட்டன் வழங்கி கவுரவித்த யூடியூப்

இந்த மகிழ்ச்சியை நல்லவிதமா கொண்டாட வேண்டும் என்று யூடியூப் சேனல் மூலமாக கிடைத்த வருமான 10 லட்சம் ரூபாயினை முதல்வர் ஸ்டாலினிடம் கொரோனா நிவாரண நிதிக்கு கொடுத்து அசத்தினர்.