ஜாமீன் கேட்கும் ஸ்வப்னா; பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய என்.ஐ.ஏவுக்கு உத்தரவு

ஜாமீன் கேட்கும் ஸ்வப்னா; பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய என்.ஐ.ஏவுக்கு உத்தரவு

தூதரகம் வழியாக கேரளவில் தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் என்.ஐ.ஏ. வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ஜாமீன் கேட்கும் ஸ்வப்னா; பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய என்.ஐ.ஏவுக்கு உத்தரவு

இந்த கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான சேர்க்கப்பட்டுள்ளார் ஸ்வப்னா. இவர் ஜாமீன் கோரி என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சந்தீப் நாயர், கே.டி.ரமீஸ் உள்ளிட்ட 7 பேரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். அத்தனை பேரின் ஜாமீன் மனுவினையும் என்.ஐ.,ஏ. சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தள்ளுபடி செய்துவிட்டது.

ஜாமீன் கேட்கும் ஸ்வப்னா; பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய என்.ஐ.ஏவுக்கு உத்தரவு

இதையடுத்து, கேரள உயர்நிதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார் ஸ்வப்னா. இந்த மனு இன்றைக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின்னர் ஸ்வபனா ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.

அதே நேரம், அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் ஜுலை 16ம் தேதிக்குள் இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.