’’மாணவர்கள் தேர்வுக்குத் தயாராக இருப்பதே விவேகம்’’

 

’’மாணவர்கள்  தேர்வுக்குத் தயாராக இருப்பதே விவேகம்’’

திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு கட்டாயமாக ரத்து செய்யப்படும் என்று தேர்தலில் வாக்குறுதி கொடுத்ததால், நீட் தேர்வு நிச்சயம் இருக்காது. திமுக அதற்கு தடை வாங்கிவிடும் என்றே மாணவர்களிடயே நம்பிக்கை இருக்கிறது. ஆனாலும் இன்னமும் திமுக ரத்து செய்யாமல், இருக்கின்ற நிலையை பார்த்து, இதைத்தானே நாங்களும் சொன்னோம். அதை ரத்து செய்ய முடியாது என்று சொன்னோம். முடியும் என்று சொல்லிவிட்டு ஏன் மழுப்புகிறீர்கள் என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பிவர, நீட் உண்டா? இல்லையா? என்ற குழப்பம் நீடித்தது.

’’மாணவர்கள்  தேர்வுக்குத் தயாராக இருப்பதே விவேகம்’’

இதையடுத்து, மாணவர்கள் உயிர் போகக் கூடாது நீட்தேர்வு நடக்கக் கூடாது என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு. அதில் எந்த மாற்றமும் இல்லை அதேநேரத்தில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் கட்டாயம் தயாராக வேண்டும். அது தவறும் இல்லை என்று தெரிவித்திருந்தார் மக்கள் நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

’’மாணவர்கள்  தேர்வுக்குத் தயாராக இருப்பதே விவேகம்’’

நீட் தேர்வு தேவையில்லை என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. எப்போது தீர்மானம் நிறைவேற்றினாலும் தடையை பெறும் நோக்கில் தான் அரசு குழு அமைத்து பல்வேறு பணிகளை செய்து வருகிறது. ஆனாலும், குறுகிய காலம் தான் இருக்கிறது. ஆகவே நீட் தேர்வு ரத்து என்று வந்தால் மகிழ்ச்சி, தடை என்று வந்தால் சரி அதற்காக அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தாமதமாகும் என்ற பட்சத்தில் தேர்வுக்கு தயாராவது தேர்வுக்கு தவறு ஒன்றும் இல்லை. தேர்வு வந்தால் மதிப்பெண் வாங்கலாம் இல்லை என்றால் ரத்து செய்யப்பட்டால் மகிழ்ச்சி. பல ஆண்டுகால முயற்சி ஓரிரு மாதத்தில் அதை தடுக்க இயலுமா என்று, அவர் கேட்டிருந்தார்.

’’மாணவர்கள்  தேர்வுக்குத் தயாராக இருப்பதே விவேகம்’’

இந்நிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.சேகரும் கூட, ‘’நீட் வேண்டாம் என்று அரசு போராடட்டும். வேண்டும் என்று வழக்கு நடக்கட்டும். ஆனால் மாணவர்கள் தேர்வுக்குத் தயாராக இருப்பதே விவேகம்!’’ என்று அறிவுறுத்தியிருக்கிறார்.