அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைகிறார்

 

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைகிறார்

அமமுகவில் டிடிவி தினகரனுக்கு அடுத்ததாக தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி , பழனியப்பன் ஆகியோர் இருந்தனர். இதில் முதலாவதாக அமமுகவிலிருந்து வெளியேறி செந்தில் பாலாஜி திமுகவில் ஐக்கியமாகி அங்கே முக்கிய கட்சிப் பதவியை பெற்றதுடன் எம்எல்ஏ சீட் வாங்கி மின் துறை அமைச்சராகவும் ஆகிவிட்டார். இவர்தான் அமமுகவிலிருந்து தங்க தமிழ்ச்செல்வனையும் திமுகவுக்கு அழைத்து சென்றதாக தகவல்.

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைகிறார்

தங்க தமிழ்ச்செல்வனுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு கிடைத்ததோடு அல்லாமல் தேர்தலில் சீட்டும் கிடைத்தது. தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டாலும் கூட அவரை மனம் தளரவிடாமல் அவருக்கு ராஜ்யசபா சீட் கொடுக்க திமுக முடிவெடுத்துள்ளதாக தகவல்.

இப்படி அதிமுக -அமமுகவில் இருந்து செல்வோருக்கு திமுகவில் நல்ல எதிர்காலம் இருப்பதை உணர்ந்த பழனியப்பனையும் திமுகவுக்கு அழைத்துச் சென்றுவிட்டார் செந்தில்பாலாஜி. ஜெயலலிதா ஆட்சியின்போது உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் பழனியப்பன். இவர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் டிடிவி தினகரன் அணியுடன் செயல்பட்டு வந்ததால் அதிமுகவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனை அடுத்து அவர் தினகரனின் அமமுகவில் இணைந்து தொடர்ந்து முக்கிய பொறுப்பில் இருந்து வந்தார். அண்மையில் அமமுகவில் இருந்து துணை பொதுச்செயலாளர் பழனியப்பனுடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மாஜி எம்.எல்.ஏக்கள் ஜெயந்தி, கென்னடி ஆகியோரும் திமுகவில் இணைந்துவிட்டனர். பழனியப்பனுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைகிறார்

இந்த வரிசையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், தேர்தல் நேரத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணையவிருப்பதாக தகவல்.

பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்றிருந்த தோப்பு வெங்கடாசலத்திற்கு நடந்த தேர்தலில் சீட் கொடுக்காததால், அவர் சுயேட்சையாக போட்டியிட்டார். இதனால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். சுயேட்சையாக போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம் 9 ஆயிரத்து 791 வாக்குகளை மட்டுமே பெற்றார். அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார்தான் வெற்றி பெற்றார்.

தோல்விக்கு பின்னர், அவர் செந்தில்பாலாஜி மூலமாக திமுகவில் சேர முயன்று வருவதாகவும், அதுவும் நாளைக்கு அவர் திமுகவில் இணைய அதிகம் வாய்ப்பிருக்கிறது என்றும் தகவல்.