“முஸ்லிமா மாறிடு இல்லேன்னா என்னை விட்டு ஓடிடு” -மதம் மாற சொல்வதாக கணவன் மீது புகார்

 

“முஸ்லிமா மாறிடு இல்லேன்னா என்னை விட்டு ஓடிடு” -மதம் மாற சொல்வதாக கணவன் மீது புகார்

ஒரு இந்து பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஒரு முஸலிம் வாலிபர் ,அந்த பெண்ணை திடீரென முஸ்லீம் மதத்திற்கு மாற சொல்லி கொடுமைப்படுத்தியதால் போலீசார் அவரை கைது செய்தார்கள்


மத்திய பிரதேச மாநிலம் ஷாஹ்தோல் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது முஸ்லிம் நபர் இர்ஷாத் கான்.இவர் இரண்டு ஆண்டுக்கு முன்பு ஒரு இந்து பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .அப்போது அவர் தான் அவரை இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாற சொல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார் .ஆனால் இப்போது அவர் மனைவியை தினமும் நமாஸ் படிக்கச் சொல்லியும் மதம் மாற சொல்லியும் கொடுமைப்படுத்துகிறாராம் .
மேலும் இஸ்லாமுக்கு மாறவில்லையென்றால் தன்னை விட்டு போய் விடும்படி கூறுவதாக அந்த பெண் புகார் கூறியுள்ளார் .அதனால் போலீசார் அந்த கான் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தார்கள் .அப்போது கான் தன்னுடைய மனைவியின் கூற்றை மறுத்துள்ளார் .மேலும் அவர் வேன்டு மென்றே தன மீது பொய் புகார் கூறுவதாகவும் ,வேறு சில பிரச்சினைகளுக்காக இப்படி தன மீது பழி போடுவதாகவும் கூறினார் .ஆனால்
போலீசார் இர்ஷாத் கான் மீது , 1968 மத்திய பிரதேச மத சுதந்திரச் சட்டம் 1968 இன் பிரிவு 3, 4 மற்றும் 5 மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498 ஏ (துன்புறுத்தல் அல்லது கொடுமை) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்தார்கள் .பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

“முஸ்லிமா மாறிடு இல்லேன்னா என்னை விட்டு ஓடிடு” -மதம் மாற சொல்வதாக கணவன் மீது புகார்