28 நாட்கள் வேலிடிட்டியுடன் மீண்டும் ரூ.100 மற்றும் ரூ.500 ரீசார்ஜ் பிளான்களை அறிமுகம் செய்த ஏர்டெல்

 

28 நாட்கள் வேலிடிட்டியுடன் மீண்டும் ரூ.100 மற்றும் ரூ.500 ரீசார்ஜ் பிளான்களை அறிமுகம் செய்த ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனம் மீண்டும் தனது ரூ.100 மற்றும் ரூ.500 ரீசார்ஜ் பிளான்களை அறிமுகம் செய்துள்ளது.

டெல்லி: ஏர்டெல் நிறுவனம் மீண்டும் தனது ரூ.100 மற்றும் ரூ.500 ரீசார்ஜ் பிளான்களை அறிமுகம் செய்துள்ளது.

ஏர்டெல் நிறுவனம் மீண்டும் தனது ரூ.100 மற்றும் ரூ.500 ரீசார்ஜ் பிளான்களை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக மை ஏர்டெல் மொபைல் ஆப்பில் இந்த ரீசார்ஜ் பிளானும் சேர்க்கப்பட்டுள்ளது. மை ஏர்டல் ஆப்பில் ‘ப்ரீபெய்டுபிரிவில் உள்ள ‘டாக் டைம்செக்ஷனில் இதைப் பார்க்க முடியும். ஆனால், எப்போது இந்த பிளான் நாடு முழுவதும் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்று தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இவ்விரு ரீசார்ஜ் பிளான்களும் லைஃப் டைம் ஆக்டிவேஷன் வேலிடிட்டி பெற்றுள்ளது.

100 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வதன் மூலம் 81.75 வரை டாக்டைம் பெற முடியும். அதேபோல 500 ரூபாய் ரீசார்ஜ் செய்யும்போது 420.73 ரூபாய் வரை டாக்டைம் பெற முடியும். இலவச இன்கமிங் கால்களை எப்போது வேண்டுமானாலும் பெற முடியும். ஆனால் இந்த ரீசார்ஜ்களுடன் மொபைல் டேட்டாவோ அல்லது எஸ்.எம்.எஸ்களோ இலவசமாக அளிப்பதாக ஏர்டெல் நிறுவனம் சார்பாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் ஏர்டெலின் நெடுநாள் ப்ரீபெய்டு திட்டத்தை பயன்படுத்தி வருவோருக்கு ஏர்டெல் டிவி ஆப்பிற்கு ப்ரீமியம் சப்ஸ்க்ரிப்ஷன் கிடைக்கும்.