28 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்கும் பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல்!

 

28 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்கும் பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் என தகவல் வெளியாகியுள்ளது. 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் என தகவல் வெளியாகியுள்ளது. 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் நிறைவற்றப்பட்ட சிறப்புத் தீர்மானத்தை நிறைவேற்றியது. இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தமிழக அமைச்சரவை கூடி 7 தமிழர்களையும் விடுதலை செய்ய ஆணையிடும்படி ஆளுநருக்கு பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் ஒருவருடமாகியும் 7 பேரை விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 
 

perarivalan

இந்நிலையில் அண்மையில் நளினி அவரது மகன் திருமணத்துக்காக பரோலில் வெளிவந்தார். தற்போது  சிறையிலுள்ள பேரறிவாளனுக்கு தமிழக அரசு ஒரு மாதம் பரோல் என தகவல் வெளியாகியுள்ளது. அவரது தந்தையின் உடல்நலம் கருதி பரோல் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.