#27YrsOfEpitomeThalaAJITH: ட்விட்டரில் தெறிக்கவிடும் தல ரசிகர்கள்! 

 

#27YrsOfEpitomeThalaAJITH: ட்விட்டரில் தெறிக்கவிடும் தல ரசிகர்கள்! 

தல அஜித் திரையுலகில் அறிமுகமாகி 27 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

#27YrsOfEpitomeThalaAJITH: ட்விட்டரில் தெறிக்கவிடும் தல ரசிகர்கள்! 

சென்னை: தல அஜித் திரையுலகில் அறிமுகமாகி 27 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

தல அஜித் கடந்த 1993ம் ஆண்டு இயக்குநர் செல்வா இயக்கத்தில் வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். நடிப்பு மட்டுமின்றி  கார் ரேஸ், மெக்கானிக், போட்டோகிராபி, ஏரோ மாடலிங் தயாரிப்பு, சமையல் என அனைத்து துறையிலும் சிறப்பாக விளங்கி வரும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். 

தனது ரசிகர்களால் அன்போடு தல என்று அழைக்கப்படும் இவர் தமிழ் திரையுலகில் 27 ஆண்டுகளைக் கடந்து மாஸ்ஸாக வலம் வருகிறார். 

இவரின் நடிப்பைப் பார்த்து தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர். இந்நிலையில் தல அஜித் திரையுலகில் 27 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், அதனை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் #27YrsOfEpitomeThalaAJITH என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியுள்ளனர். அதன்மூலம் ட்விட்டரில் அவரது ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர். 

மேலும் வரும் 8ம் தேதி அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ்சில் வசூலை வாரிக் குவிக்கும் என்று தல ரசிகர்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.