பள்ளி கழிப்பறைக்குள் தூக்கில் தொங்கிய ஆசிரியை ;கடிதம் சிக்கியது

 

பள்ளி கழிப்பறைக்குள் தூக்கில் தொங்கிய ஆசிரியை ;கடிதம் சிக்கியது

பள்ளி கழிவறைக்குள் ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் தற்கொலைக்கு முன்னர் எழுதி வைத்த கடிதம் சிக்கியது.

பள்ளி கழிப்பறைக்குள் தூக்கில் தொங்கிய ஆசிரியை ;கடிதம் சிக்கியது

குஜராத் மாநிலத்தில் சோட்டா உதேபூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் பாவ்னாபென் டாமர்(வயது34). இவர் கணவருடன் நாஸ்வாடியில் வசித்து வந்தார். நேற்று முன் தினம் 30.6.2021 அன்று பள்ளிக்கூடத்திற்கு சென்றவர் கழிவறைக்கு சென்றுவிட்டு வருவதாக சக ஆசிரியைகளிடம் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். நெடுநேரம் ஆகியும் அவர் வராததால் ஆசிரியர்கள் பதறியடுத்துக்கொண்டு கழிவறை பக்கம் ஓடியிருக்கிறார்கள்.

பள்ளியின் ஸ்டோர் ரூமுக்குள் அமைந்துள்ள கழிப்பறையின் கதவு உள் பக்கமாக தாழிடப்பட்டிருந்ததால் சந்தேகம் அடைந்த ஆசிரியர்கள் கதவை உடைத்தனர்.
அங்கே ஆசிரியை பாவ்னாபென் டாமர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பள்ளி கழிப்பறைக்குள் தூக்கில் தொங்கிய ஆசிரியை ;கடிதம் சிக்கியது

கழிவறையின் ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் பாவ்னாபென் டாமர். இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பாவ்னாபென் டாமரின் உடலை பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆசிரியையின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரனை மேற்கொண்டபோது, தற்கொலைக்கு முன்பாக ஆசிரியை எழுதி வைத்துள்ள கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் என்ன எழுதி இருக்கிறார் என்கிற தகவலை போலீசார் இன்னும் வெளியிடவில்லை.

பாவ்னாபென் டாமரின் தற்கொலை குறித்து அவரது கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தனது மகள் கொஞ்ச நாளாக மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளனர் பாவ்னாபென் டாமரின் பெற்றோர்.

பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் விசாரணை மேலும் தீவிரமாகும் என்று தெரிகிறது.