’’ஒரு அரசு இப்படியா நடந்து கொள்ளும்?உலகில் இதைவிட ஒரு மோசமான, இரக்கமற்ற அரசு இருக்கவே முடியாது’’

 

’’ஒரு அரசு இப்படியா நடந்து கொள்ளும்?உலகில் இதைவிட ஒரு மோசமான, இரக்கமற்ற அரசு இருக்கவே முடியாது’’

சமையல் எரிவாயு விலை அவ்வப்போது உயர்த்தப்பட்டு வந்தாலும் அதற்கு ஏற்ப மானியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த மானியம் நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில் சமையல் எரிவாயு விலை மட்டும் ஏறிக்கொண்டே போவதால், பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

’’ஒரு அரசு இப்படியா நடந்து கொள்ளும்?உலகில் இதைவிட ஒரு மோசமான, இரக்கமற்ற அரசு இருக்கவே முடியாது’’

தற்போது சமையல் எரிவாயு விலை திடீரென 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 14 கிலோ கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.25.50 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சிலிண்டர் விலை ரூ.825ஆக இருந்த நிலையில், ரூ.25.50 உயர்த்தப்பட்டு ரூ.850.50 ஆக உயர்ந்திருக்கிறது.

ஜனவரி மாதம் 1ம் தேதி அன்று 710 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை பிப்ரவரி 25ம் தேதி முதல் 810 ரூபாயாக மாறியது. மார்ச் 1ம் தேதி முதல் 835 ரூபாயாக உயர்ந்தது.

ஏப்ரல் 1ம் தேதி முதல் 10 ரூபாய் குறைந்து 825 ரூபாய் ஆனது. அதுவே மே1ம் தேதியும் 825 ரூபாயாகவே இருந்தது. ஜூன் 1ம் தேதியும் அதே நிலவரம்தான். மூன்று மாதங்களாக விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் ஜூலை 1ம் தேதி முதல் 850 ரூபாயாக விலை உயர்ந்திருக்கிறது. கடந்த 8 மாதங்களில் 140 ரூபாய் உயர்த்தப்பட்டிருக்கிறது.

’’ஒரு அரசு இப்படியா நடந்து கொள்ளும்?உலகில் இதைவிட ஒரு மோசமான, இரக்கமற்ற அரசு இருக்கவே முடியாது’’

இதனால் கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, ‘’மோடி அரசு கடந்த எட்டு மாதங்களில் மட்டும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 140 ரூபாய் உயர்த்தியுள்ளது. உலகில் இதைவிட ஒரு மோசமான, இரக்கமற்ற அரசு இருக்கவே முடியாது’’என்கிறார்.

அவர் மேலும் இந்த மக்கள் பிரச்சனையில், ’’மோடிஅரசு எவ்வளவு இரக்கமற்றது என்பதற்கு இந்த விலையேற்றம் சாட்சி. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றத்தில் அடித்த கொள்ளை மட்டும் 20 லட்சம் கோடிகள். கொரோனா தொற்றால் மக்கள் உயிருக்கும், அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கும் போராடிக்கொண்டிருக்கும்போது ஒரு அரசு இப்படியா நடந்துகொள்ளும்?’’ என்று கேட்கிறார்.