மாமியார் – மருமகன் காதல்..ஊரறியத்தான் திருமணம் செய்துகொள்வோம் என்று பிடிவாதம்

 

மாமியார் – மருமகன் காதல்..ஊரறியத்தான் திருமணம் செய்துகொள்வோம் என்று பிடிவாதம்

மாமியாரும் மருமகனும் ஒருவரை ஒருவர் விரும்பியது மட்டுமல்லாமல் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். அதுவும் ஊரறிய திருமணம் செய்ய முயற்சி செய்ததால் ஊரே ஒன்று கூடி எதிர்த்ததால் கலவரமாகி விட்டது. உத்தர பிரதேச மாநிலம் முசாபர் மாவட்டத்தில் முண்ட்பார் கிராமத்தில்தான் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

மாமியார் – மருமகன் காதல்..ஊரறியத்தான் திருமணம் செய்துகொள்வோம் என்று பிடிவாதம்

பாப்ஸி என்கிற 50 வயது பெண்ணின் மகளும் மருமகனும் ஒன்றாக வாழ்ந்து வந்தபோது மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையே காதல் மலர்ந்திருக்கிறது. இந்த காதல் திருமணம் வரைக்கும் சென்றிருக்கிறது.

எத்தனை காலம்தான் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக சந்திப்பது பேசிக்கொள்வது அதனால் எங்காவது சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்திருக்கிறார்கள். அதன்படியே இருவரும் ஊரை விட்டு ஓடி விட்டார்கள். ஊரை விட்டு ஓடி 10 மாதங்களாக தனிக்குடித்தனம் நடத்தி வந்தாலும், திருமணம் மட்டும் செய்துகொள்ளவில்லை.

ஊரறிய திருமணம் செய்து கொண்டு அதே ஊரில் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று வைராக்கியம் கொண்டிருந்திருக்கிறார்கள். இதனால் இருவரும் சொந்த ஊருக்கு திரும்பி இருக்கிறார்கள்.

மாமியார் – மருமகன் காதல்..ஊரறியத்தான் திருமணம் செய்துகொள்வோம் என்று பிடிவாதம்

10 மாதங்களுக்கு பிறகு கணவனும் தன் தாய் வந்திருப்பதை பார்த்து, என் கணவனை இப்படி அநியாயமாக அபகரித்துக்கொண்டாயே என்று சத்தம் போட்டு ஊரை கூட்டி இருக்கிறார். ஊராரும் கூடி விட்டனர். மாமியார், மருமகன் முடிவைக் கேட்ட ஊரார், இந்த உறவு முறையில் உள்ளவர்கள் பகிரங்கமாக ஊரறிய திருமணம் செய்ய கூடாது என்று கடுமையாக எதிர்த்தனர்.

நீங்கள் யார் எங்கள் திருமணத்தை எதிர்ப்பதற்கு என்று அவர்களிடம் மாமியாரும், மருமகளும் வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் கைகலப்பாகி போலீசாரும் வந்து விட்டனர். அவர்கள் வந்து மாமியாரும் , மருமகளும் ஊருக்குள் பிரச்சனை செய்ததாக அவர்களை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.